">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
இசை ரசிகர்களே… SPB-க்காக இதை செய்யுங்கள் – ஏஆர் ரஹ்மான் உருக்கம்!
கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை இந்த நோய் தொற்றினால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்தவகையில் பிரபல பாடகர் எஸ்பிபியும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகிறார்.
கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி உடல் நிலை சரியில்லாமல் சோர்வாக இருப்பதை உணர்ந்ததுடன் லேசாக சளி மற்றும் விட்டு விட்டு காய்ச்சல் இருந்து வந்ததால் கொரோனா பரிசோதனை எடுத்து பார்த்தபோது தான் அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இதையடுத்து சற்றுமுன் எம்ஜிஎம் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், ” பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாகவும் இதனால் அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு செயற்கை சுவாசம் வழங்கப்படுவதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டனர்.
இந்நிலையில் எஸ்பிபி உடல்நிலையில் குறித்து ஏ.ஆர் ரஹ்மான், “அனைத்து இசை ரசிகர்களும் என்னுடன் சேர்ந்து பிரார்த்தனை செய்யுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்கள் தன்னுடைய அற்புதமான குரலால் நமக்கு நிறைய மகிழ்ச்சியை அளித்துள்ளார்!” என்று பதிவிட்டுள்ளார்.
I request all the music fans to pray for this legend along with me ..#SPBalasubrahmanyam ..he has given us so much joy with his amazing voice! https://t.co/8r2TjQe6wj
— A.R.Rahman (@arrahman) August 14, 2020