Connect with us

Cinema News

என்னது மூணு மங்கீசா? வலைப்பேச்சு குரூப்பை தாக்கி பேசிய நயன்தாரா!.. அப்படி என்ன பஞ்சாயத்து!

நயன்தாரா:தென்னிந்திய சினிமா உலகில் மிகவும் பிரபலமான நடிகை நயன். நடிகையாக மட்டுமில்லாமல் சமீபகாலமாக ஒரு பிஸினஸ் வுமனாகவும் ஜொலித்து வருகிறார். தற்போது நயன் ஒரு ஆங்கில சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்திருக்கிறார். அந்த பேட்டியில் அவரை பற்றி சில பேர் விமர்சனம் செய்வதாகவும் அவர்கள் குரங்குக்கு சமமானவர்கள் என்றும் பேசியிருக்கிறார் நயன்.

இதோ அவர் பேசிய முழு விவரம். அவர்கள் எப்போதும் என்னை பற்றித்தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் சேனலில் எந்த எபிசோடை எடுத்தாலும் ஆனால் எவ்வளவு எபிசோடை அவர்கள் கடந்திருக்கிறார்கள் என எனக்கு தெரியாது. ஒரு 50 எபிசோடு இருக்கிறது என்றால் அதில் 45 எபிசோடு என்னைப் பற்றித்தான் இருக்கும். அதனால் ஒரு சமயம் சில பேரை வைத்து அவர்கள் ஏன் இப்படி என்னை டார்கெட் செய்து பேசுகிறார்கள் என விசாரிக்க சொன்னேன்.

பணத்திற்காகத்தான்: அவர்கள் விசாரித்ததில் என் பேரை அவர்கள் பயன்படுத்தும் பட்சத்தில் நிறைய வியூவ்ஸ் அவர்களுக்கு வருகிறது. அதோடு நிறைய பணமும் சம்பாதிக்கிறார்கள் என்று தெரியவந்தது. இருந்தாலும் பரவாயில்லை. இப்போது அதை அவர்கள் அதை விட வேண்டும். என் பெயரை பயன்படுத்தினாலும் பரவாயில்லை. அதாவது நான் சம்பாதிப்பதைப் பற்றியோ, தனுஷ் பணம் சம்பாதிப்பது பற்றியோ அல்லது வேறு யாரைப் பற்றியோ முழுவதும் பேசிக் கொண்டிருக்க முடியாது இல்லையா?

ஆனால் இவர்கள் பேசுகிறார்கள். அது வேடிக்கையாக இருக்கிறது. ஏனென்றால் அவர்கள் உண்மையில் வதந்திகளால் பணம் சம்பாதிப்பவர்கள். அவர்களை பார்க்கும் போது மூன்று குரங்குகள்தான் நியாபகம் வரும். கெட்டதை பார்க்காதே. கெட்டதை பேசாதே. கெட்டதை கேட்காதே. இதை விளக்கும் வகையில் மூன்று குரங்குகள் சிலை இருக்கும். அதுதான் எனக்கு தோன்றும்.

குரங்குக்கு சமம்: ஆனால் இவர்கள் அந்த குரங்குகளுக்கு நேர் எதிரானவர்கள். கெட்டதை தான் பார்க்கிறார்கள். கெட்டதைத்தான் பேசுகிறார்கள். கெட்டதைத்தான் கேட்கிறார்கள். இப்படி சொல்வதற்கு என்னை மன்னிக்கவும். இவர்களை பற்றி எப்படி குறிப்பிடுவது என்று எனக்கு தெரியவில்லை. அதனால்தான் இந்த விஷுவல் மூலம் எடுத்துக்காட்டினேன் என்று கூறியிருந்தார். சரி இதெல்லாம் பார்க்கும் போது உங்களுக்கு கோபம் வரவில்லையா? சிரிக்கிறீர்கள் என்று கேட்டதற்கு ஒரு வேடிக்கையானவர்களிடம் இருந்து இப்படி வரும் போது அதை நாம் சீரியஸாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று பதில் அளித்திருந்தார்.

அதுமட்டுமில்லாமல் ஏதோ எல்லாம் தெரிந்து என் அருகில் இருந்து பார்த்தவர்கள் மாதிரி பேசுவார்கள். அதில் ஒருவர் என் பயணத்தை பற்றி அதாவது என் முழு வாழ்க்கையின் அத்தியாயத்தை பற்றி ஒரு எபிசோடில் என் அப்பா மாதிரி பேசியிருந்தார். அவர்களுக்கு என்ன தெரியும்? என்றும் அந்த பேட்டியில் கூறியிருக்கிறார் நயன்தாரா.இவரது பேட்டியை பார்த்த அனைவருமே வலைப்பேச்சு குரூப்பைத்தான் பேசுகிறார் நயன். அவர்களுக்கு இதை விட ஒரு தரமான ஸ்லிப்பர் ஷாட் கொடுக்கவே முடியாது. ஹேட்ஸ் ஆஃப் யூ மேம். என்றெல்லாம் நயனுக்கு ஆதரவாக கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in Cinema News

To Top