Connect with us

latest news

நயன்தாரா பக்கத்துல திடீரென வந்து உட்கார்ந்த முன்னாள் காதலர்!.. செம கடுப்பான லேடி சூப்பர் ஸ்டார்!..

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா சமீபகாலமாக பெரிதாக எந்த ஒரு நிகழ்ச்சிகளுக்கும் செல்லாமல் இருக்க சிம்புவும் ஒரு காரணம் என பத்திரிக்கையாளர் பிஸ்மி சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேசும்போது கூறியுள்ளார்.

வல்லவன் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். அந்த படத்தில் நடிக்கும் போது இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்தனர். நயன்தாரா மற்றும் சிம்புவின் ஆஃப் ஸ்க்ரீன் லிப் லாக் முத்தக் காட்சிகள் வைரல் ஆகின.

நடிகை நயன்தாரா ரகசியமாக தனது காதலை வைத்திருக்க நினைத்த நிலையில், சிம்பு தான் அதை கசிய விட்டார் என்கிற சர்ச்சை வெடித்த நிலையில் சிம்புவை பிரேக்கப் செய்துவிட்டு நயன்தாரா சென்று விட்டார் என சினிமா வட்டாரத்தில் கூறுகின்றனர்.

சிம்புக்கு பிறகு பிரபுதேவாவை வில்லு படத்தின் படப்பிடிப்பின் போது காதலித்து வந்த நயன்தாரா திருமணம் வரை சென்ற நிலையில், பிரபுதேவாவின் மூத்த மனைவி பண்ண பிரச்சனை காரணமாக பிரபுதேவாவை நயன்தாராவால் திருமணம் செய்து கொள்ள முடியவில்லை.

பட புரோமஷன், விருது விழா நிகழ்ச்சிகள் என பங்கேற்று வந்த நயன்தாரா ஒருமுறை பிரபல யூடியூப் சேனல் நடத்திய விருது விழாவுக்கு கலந்து கொண்ட போது, அவருக்கு ஒதுக்கப்பட்ட பெரிய சோபாவில் திடீரென சிம்பு வந்து உட்கார்ந்தது அவருக்கு சுத்தமாக பிடிக்கவில்லையாம்.

உடனடியாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளருக்கு மெசேஜ் செய்து சிம்புவை தனது இருக்கையில் இருந்து அப்புறப்படுத்தினார் நயன்தாரா என பிஸ்மி கூறியுள்ளார்.

அதிகமாக அவர் நிகழ்ச்சிகளில் பங்கேற்காததற்கு காரணமே இதுபோல திடீரென தனக்கு வேண்டாதவர்கள் வந்து விட்டால் நேருக்கு நேர் சந்திக்க நேரிடும் என்பதால் தான் என அவர் கூறியுள்ளார்.

author avatar
Saranya M
Continue Reading

More in latest news

To Top