Connect with us

latest news

தமிழ் தீ பரவட்டும்.. எழுச்சி மிக்க படம்தான்.. வைரலாகும் ‘பராசக்தி’ படத்தின் புதிய போஸ்டர்

பராசக்தி: சிவகார்த்திகேயன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் தற்போது தயாராகி வரும் திரைப்படம் பராசக்தி. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீ லீலா ஆகியோர் நடித்து வருகின்றனர். முதன் முறையாக ஜெயம் ரவி இந்த படத்தில் மெயின் வில்லனாக நடிக்கிறார். ஏற்கனவே சிவாஜியின் பராசக்தி படத்தின் தலைப்பை வைக்கக்கூடாது. அது முறையல்ல என சித்ராலட்சுமணன் முன்னதாக ஒரு பேட்டியில் கூறியிருந்தார். இருந்தாலும் சிவகார்த்திகேயனின் இந்த படத்திற்கு பராசக்தி என பெயர் வைக்கப்பட்டுள்ளது .

ராஜேந்திரனின் வாழ்க்கை வரலாறு: இந்த படத்தை பொருத்தவரைக்கும் இந்தி திணிப்புக்கு எதிராக 1967ஆம் ஆண்டு நடந்த போராட்டத்தை மையமாக வைத்து கதை அமைந்திருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த போராட்டத்தில் பலியான அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர் ராஜேந்திரனின் வாழ்க்கை வரலாறை தான் இந்த படம் பேசப்போகிறது என்றும் சில தகவல்கள் கிடைத்துள்ளன. அந்த ராசேந்திரனின் கதாபாத்திரத்தில் தான் சிவகார்த்திகேயனும் நடிக்கப் போகிறார் என்றும் சொல்லப்படுகிறது.

ஏற்கனவே அமரன் திரைப்படத்தில் மேஜர் முகுந்த் வரதராஜன் கதாபாத்திரத்தில் நடித்து தனக்கென ஒரு தனி முத்திரை பதித்தவர். இப்போது மீண்டும் வரலாற்று சிறப்புமிக்க ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கப் போகிறார் என்றதும் சிவகார்த்திகேயன் மீதும் இந்த படத்தின் மீதும் பெரிய அளவில் எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. இந்திய அளவில் பெரும் புரட்சியை ஏற்படுத்திய போராட்டம் தான் இந்தி திணிப்பு போராட்டம்.

ஜெயம் ரவி வில்லத்தனம்: அதை இந்த படம் பேசப்போகிறது என செய்திகள் வெளியானதும் அனைவரும் படத்தை பார்க்க ஆவலாக காத்திருக்கிறார்கள். அது மட்டுமல்ல படத்தின் டீசரிலேயே என்ன மாதிரியான கதையை சொல்லப் போகிறது என்பதை நம்மால் ஓரளவு யூகிக்க முடிகிறது. ஒரு பக்கம் அதர்வா அவருடைய ஃபுல் எஃபக்ர்ட்டை இந்த படத்திற்காக கொடுத்திருக்கிறார் என்றும் தெரிகிறது. ஜெயம் ரவி வில்லனாக இந்த படத்தில் மாஸ் காட்டி இருப்பார் என்றும் தெரிகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் புதிய போஸ்டரை இன்று படக்குழு வெளியிட்டுள்ளது.

எழுச்சி பெறுமா பராசக்தி?: அதில் சிவகார்த்திகேயன் எழுச்சிமிக்க கண்களுடன் தாள்களை பறக்க விட்டது மாதிரியான ஒரு போஸில் அந்த போஸ்டரில் காணப்படுகிறார். அதில் ஒரு பேப்பரில் மட்டும் தமிழ் தீ பரவட்டும் என எழுதப்பட்டுள்ளது. அந்த ஒரு போஸ்டர் தான் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. படம் முழுக்க தமிழ் மொழியைப் பற்றியும் தமிழ் மக்களை பற்றியும் தமிழ் மக்களின் வீரம் எழுச்சி எந்த அளவுக்கு இருக்கப் போகிறது என்பதைப் பற்றியும் கண்டிப்பாக பேசும் படமாக தான் இந்த பராசக்தி திரைப்படம் அமையப்போகிறது என்பதை இந்த ஒரு பேப்பரில் இருந்து நம்மால் அறிந்து கொள்ள முடியும்.

ஏற்கனவே சிவாஜி நடிப்பில் வெளியான பராசக்தி திரைப்படத்தில் கலைஞரின் எழுச்சிமிக்க வசனம் எந்த அளவு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது என அனைவருக்கும் தெரியும். அதனால் இந்தப் படமும் தமிழ் மொழியின் முக்கியத்துவத்தை இன்னும் வேறு விதமாக காட்டப் போகிறது என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in latest news

To Top