பார்த்திபன் இயக்கும் படங்கள் வித்தியாசமாக இருந்தாலும் அனைத்து ரசிகர்களும் பார்க்கும்படி இருக்காது என்கிற பேச்சுக்கள் தான் அவரது படத்துக்கு பெரிதும் தியேட்டர்கள் கிடைக்காமல் போவதற்கும் கிடைத்த 100 தியேட்டர்களிலும் ஒரு தியேட்டர் கூட ஹவுஸ்ஃபுல் ஆவதற்கும் காரணம் என்கின்றனர்.
13 குழந்தைகளை வைத்துக்கொண்டு பார்த்திபன் இயக்கி உள்ள டீன்ஸ் திரைப்படத்தில் இரண்டாம் பாதியில் அவரும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்து அந்த குழந்தைகளை காப்பாற்றும் ஹீரோவாக மாறுகிறார்.
13 வயது நிரம்பிவிட்ட 13 சிறுவர் சிறுமிகள் வெளிநாடுகளில் இருப்பதைப் போல தாங்களும் பெரிய மனிதர்கள் ஆகிவிட்டோம் என்பதை நிரூபிக்க ஒரு சிறுமியின் பாட்டி ஊரில் பேய் நடமாட்டம் இருப்பதாகவும் அதை நேரடியாக போய் சந்தித்து விட்டு வரலாம் என்று பள்ளியை கட் அடித்துவிட்டு கிளம்பும் மாணவர்கள் பேயை பார்த்தார்களா அல்லது அவர்கள் காணாமல் போவதற்கு பின்னாடி உள்ள அறிவியல் என்ன அவர்களுக்கு என்ன ஆகிறது என்பதை படமாக்கியுள்ளார்.
வித்தியாசமான முயற்சியாக கடைசியாக ஒரு இயக்கிய இரவின் நிழல் திரைப்படமும் வித்தியாசமான முயற்சி என பாராட்டுகளைப் பெற்றது. ஆனால் ரசிகர்கள் ரசித்து பார்க்கும்படி படம் அமையவில்லை. இந்த டீன்ஸ் திரைப்படமும் முதல் பாதி முழுவதும் சத்ய சோதனையாக உள்ளது.
இரண்டாம் பாதியில் அவர் சொல்லும் விஷயத்திற்காக ஒரு மணி நேரம் காத்து கிடப்பது ரசிகர்களை கடுப்பாக்கி விடுகிறது. முதல் நாளில் இந்த படம் வெறும் 7 லட்சம் ரூபாய் மட்டுமே சம்பாதித்த நிலையில், இந்தியன் 2 படத்தின் ஃபிளாப் ரிசல்ட் டீன்ஸ் படத்துக்கு சற்று கை கொடுத்த நிலையில், இரண்டாம் நாள் வசூல் 18 லட்சமும் மூன்றாம் நாள் வசூல் 26 லட்சமாக உயர்ந்து கொண்டே வருகிறது.
ஒட்டுமொத்தமாக பார்த்திபன் இயக்கி நடித்துள்ள இந்த டீன்ஸ் திரைப்படம் 51 லட்சம் ரூபாய் வசூலை கடந்த மூன்று நாட்கள் பெற்றுள்ளது. ஒரு கோடி ரூபாய் வசூலாவது பார்த்திபன் படத்துக்கு வருமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
TVK Vijay:…
ரஜினி கமல்…
Rajasaab: ஏற்கனவே…
Kantara Chapter…
str 49…