தமிழ் சினிமாவில் ஒரு மாபெரும் ஆளுமையாக கிட்டத்தட்ட ஐம்பது வருடங்களாக திகழ்ந்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் அடுத்த வருடம் தன்னுடைய ஐம்பதாவது பொன் விழா ஆண்டை கொண்டாட இருக்கிறார். சினிமாவிற்கு வந்து 50 ஆண்டுகள் ஆன நிலையில் அவருடைய சாதனைகள் போராட்டங்கள் கஷ்டங்கள் என ஒவ்வொன்றாக இணையதளத்தில் இப்போதிலிருந்து வைரலாகி வருகின்றது.
அவரைப் பற்றி நிறைய பேர் பல அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர். அவருடைய ஐம்பதாவது பொன்விழா ஆண்டை ஒட்டு மொத்த தமிழ் சினிமாவும் கையில் எடுத்து சிறப்பாக கொண்டாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அளவுக்கு ரஜினி மிகப்பெரிய அளவில் கொண்டாடப்படக்கூடிய நடிகர் தான். 74 வயதிலும் இந்த அளவும் ஆக்சன் படங்களில் நடிக்க முடியுமா என அனைவருக்கும் ஒரு ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறார்.
சமீபத்தில் கூட கூலி திரைப்படத்தின் ஒரு பாடல் வெளியானது. அதில் அவருடைய டான்ஸ் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மனுஷன் இந்த வயசுலயும் இப்படி ஆடுகிறாரே என அனைவரும் பேசி வந்தனர். இதற்கெல்லாம் அவருடைய நல்ல எண்ணங்கள்தான் காரணம். அது எப்படி என்பதை பற்றி ரஜினியே ஒரு மேடையில் கூறினார். 60 ஆண்டுகளாக நான் தரையில் படுத்து தான் தூங்குகிறேன். 20 நிமிடங்கள் பிராணயாமம். 20 நிமிடம் தியானம் என என் வாழ்க்கையை இப்படித்தான் நான் கொண்டு செலுத்துகிறேன்.
எங்கு போனாலும் சரி இப்போது வரை நான் தரையில் படுத்து தான் தூங்குகிறேன். மனதில் தீய எண்ணங்கள் வரும் பொழுது உடனே குரு மந்திரத்தை சொல்ல ஆரம்பித்து விடுவேன் .நம் எண்ணம் நன்றாக இருந்தால் தான் நம் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை உடையவன். அதனால் பாசிட்டிவான விஷயத்தை மட்டுமே நினைப்பேன் என அந்த மேடையில் கூறியிருந்தார்.
இந்த ஒரு எண்ணம் தான் அவரை இந்த வயதிலேயே துள்ளல் போட வைக்கிறது. வயதானாலும் மனதளவில் இன்னும் இளமையாகவே தான் இருக்கிறார் ரஜினி. தற்போது கூலி படத்தில் நடித்து வருகிறார் ரஜினி .அந்த படம் பெரிய எதிர்பார்ப்பில் இருந்து வருகிறது. அதற்கு காரணம் ரஜினியின் படம் என்றாலும் அதை லோகேஷ் இயக்கும் பட்சத்தில் அவருடைய டைரக்ஷனில் படம் எந்த அளவு வரப்போகிறது என்ற ஒரு ஆர்வம் அனைவரும் மத்தியில் இருந்து வருகிறது.
வடிவேலு ஒரு…
TVK Vijay:…
நான் கைக்கூலி…
TVK Vijay:…
TVK Vijay:…