">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
உடலுக்கு மிளகு ரசம்; உயிருக்கு முகக்கவசம் – விவேக் வெளியிட்ட வீடியோ
தமிழகத்தில் கொரோனா வைரஸால் இதுவரை 1267 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை தினம் தினம் அதிகரித்து வருகிறது.
இதைத்தொடர்ந்து கொரொனோ தொடர்பான விழிப்புணர்வு வீடியோக்களை பிரபலங்கள் பலரும் வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் விவேக் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், இத்தனை நாட்கள் நாம் ஊரடங்கு உத்தரவை சரியாக கடைபிடித்ததால்தான் தொற்று எண்ணிக்கை குறைந்துள்ளது. தற்போதும் மேலும் 20 நாட்களுக்கு அரசு கூறும் விதிமுறைகளை சரியாக கடைபிடித்தால் மட்டுமே இந்த தொற்றிலிருந்து நாம் முழுமையாக வெளியே வர முடியும். நம் வாழ்க்கைக்கு இரண்டு சம் மிகவும் முக்கியம். சாப்பாட்டுக்கு மிளகு ரசம். உயிருக்கு முகக்கவசம். இரண்டும் இருந்தால் வாழ்க்கை ஆசம் என அவர் அந்த வீடியோவில் பேசியுள்ளார்.
உடலுக்கு மிளகு ரசம்; உயிருக்கு முகக் கவசம்! மிக மிக முக்கியம் ! மறக்க வேண்டாம்! Next 20 days will decide our social freedom. Respect the advice of Govt n doctors! Mask is a must. pic.twitter.com/ejmVllElO8
— Vivekh actor (@Actor_Vivek) April 17, 2020