">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
வெளியே வரமாட்டேன் போடா… அஜித்தை வச்சு செய்த புகைப்படம் – கொலவெறியில் ரசிகர்கள்!
இந்தி தெரியாது போடா என்ற ஹேஷ்டேக்கை லேசாக மாற்றி போட்டு அஜித்தைக் கிண்டல் செய்துள்ளது ஆனந்த விகடன்.
இந்தி தெரியாது போடா என்ற ஹேஷ்டேக்கை லேசாக மாற்றி போட்டு அஜித்தைக் கிண்டல் செய்துள்ளது ஆனந்த விகடன்.
தமிழின் முன்னணி வாரப்பத்திரிக்கையாக இருந்து வருகிறது ஆனந்த விகடன். விகடனுக்கும் தல ரசிகர்களுக்கும் அவ்வப்போது ஏதாவது வாய்க்கால் தகராறு இணையத்தில் நடந்து கொண்டு இருக்கும். அந்த வகையில் இன்று ஒரு சர்ச்சையைக் கிளப்பியுள்ளது விகடன் நிறுவனம்.
சமீபத்தில் டிவிட்டரில் ட்ரண்டான இந்தி தெரியாது போடா என்ற வாசகத்தை வேறு மாதிரி மாற்றி அஜித்தைக் கேலி செய்யும் விதமாக ஒரு படத்தை வெளியிட்டுள்ளது ஆனந்த விகடன். அதில் ‘வெளியே வரமாட்டேன் போடா’ என்ற வாசகம் தாங்கிய டிஷர்ட்டை அஜித் அணிந்திருப்பது போல புகைப்படத்தை வெளியிட, இதைப் பார்த்து அஜித் ரசிகர்கள் கடுப்பாகி, விகடனை கண்டபடி சமூகவலைதளங்களில் திட்ட ஆரம்பித்துள்ளனர்.