">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
பைக்கை பறிமுதல் செய்த போலீசார் – நடுரோட்டில் தீக்குளித்த வாலிபர் மரணம்
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு மே 3ம் தேதி வரை நீட்டிக்கபட்டுள்ளது.�
ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் வீட்டில் முடங்கியுள்ளனர். அத்தியாவசிய தேவைகள் தவிர மக்கள் வெளியே வர வேண்டாம் எனவும், முகக்கவசம் அணிய வேண்டும் எனவும், ஒரு வாகனத்தில் ஒருவர் மட்டுமே வரவேண்டும் என்பது உள்ளிட்ட பல விதிமுறைகளை போலீசார் வகுத்துள்ளனர். ஆனாலும், பலரும் விதிமுறைகளை மீறி சாலைகளில் வாகனங்களில் வருவதும், அவர்களை போலீசார் எச்சரிப்பதும் தொடர்கதையாகி வருகிறது.
இந்நிலையில், மூணாற்றில் இரு சக்கர வாகனத்தில் வந்த வாலிபரை தடுத்து நிறுத்திய போலீசார் அவரின் பைக்கை பறிமுதல் செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் அங்கே தீக்குளித்தார். இதில் அவர் அங்கேயே மரணமடைந்தார்.இந்த சம்பவம் மூணாற்றில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரை பற்றிய தகவல் விரைவில் வெளியாகும் எனத்தெரிகிறது.