பிரதீப் ரெங்கநாதன்: ஒரே படம்தான். ஓஹோனு வாழ்க்கைனு சொல்லுவாங்க. அது பிரதீப் ரெங்க நாதன் வாழ்க்கையில் நிஜமாகியிருக்கிறது. கோமாளி பட இயக்குனர் தான் பிரதீப் ரெங்க நாதன். இதுவரை யாருமே முயற்சி செய்யாத ஒரு படம் கோமாளி. பார்க்க முற்றிலும் வித்தியாசமாக இருந்தது. அதில் கூடவே யோகிபாபுவின் காமெடி என படம் முழுக்க முழுக்க காமெடி கலந்த படமாக இருந்தது. படமும் சூப்பர் ஹிட் வெற்றி. அதுவரை பிரதீப் ரெங்க நாதனை யாருமே பார்த்திருக்க மாட்டார்கள்.
தனுஷுக்கும் இதே நிலைமைதான்: ஏன் கோமாளி பட இயக்குனர் பிரதீப் ரெங்க நாதன் என்று மட்டும்தான் தெரியுமே தவிற மற்றபடி மிகவும் பிரபலமான நபரும் கிடையாது. அதன் பிறகு லவ் டுடே படத்தை இயக்கினார். அதில் அவரே ஹீரோவாகவும் நடித்தார். ஆரம்பத்தில் இந்த மூஞ்சியெல்லாம் ஹீரோவா என்று பார்த்திருந்த ரசிகர்கள்தான் ஏராளம். இதே மாதிரியான நிலைமைதான் தனுஷுக்கும் இருந்தது. ஆனால் லவ் டுடே படமும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பார்த்து ரசிக்கும் படமாக இருந்தது.
பெரிய உதாரணம்: இந்தப் படத்தின் கதையையும் இதுவரை யாருமே தொட்டதில்லை. அதுவே ஒரு புது முயற்சி. பெரிய வெற்றி. லவ் டுடே படத்திற்கு பிறகுதான் சினிமாவும் ஒரு நல்ல வளர்ச்சியை நோக்கி பயணிக்க ஆரம்பித்தது. எந்தவொரு பெரிய ஹீரோவும் இல்லாமல், மாஸ் ஓப்பனிங்கும் இல்லாமல், பெரிய பட்ஜெட் படமாகவும் இல்லாமல் நல்ல கதையை மட்டும் கொண்டிருந்தால் அந்த படம் பெரிய ஹிட்டாகும் என்பதற்கு லவ் டுடே படம் பெரிய உதாரணம்.
டிராகன்: அதன்பிறகு தொடர்ந்து பிரதீப் ரெங்க நாதன் படங்களில் நடிக்க தொடங்கினார். விக்னேஷ் சிவன் இயக்கதில் எல்ஐகே படத்திலும் நடித்து வருகிறார். இப்போது அவரது நடிப்பில் டிராகன் படம் தயாராகியிருக்கிறது. இந்த படம் வரும் 21 ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது. அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரெங்க நாதனுடன் இந்தப் படத்தில் கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன், விஜே சித்து என பல நடிகர்கள் நடித்துள்ளனர்.
நீ ஹீரோவா?: சமீபத்தில்தான் படத்தின் இசை வெளியீட்டுவிழா சென்னையில் நடைபெற்றது. அப்போது பேசிய பிரதீப் ரெங்கநாதன் முதலில் லவ் டுடே படத்தின் சமயத்தில் என் கூட நடிக்க நடிகைகள் தயங்கினார்கள். படத்தின் கதையை சொல்லுவேன். ஓ சூப்பரா இருக்கு. ஹீரோ யாருனு கேப்பாங்க. நான் தான் ஹீரோனு சொல்லுவேன். உடனே ‘ஐய்யோ அந்த நேரத்தில் எனக்கு கால்ஷீட் இல்லையே’ என்று சொல்லி மறுத்துவிடுவார்கள்.
இன்னும் சில பேர் இந்தப் படத்தில் பெர்ஃபார்மன்ஸ் அதிகமாக இருக்கிறது. எனக்கு கொஞ்சம் குறைவாக இருந்தால் நன்றாக இருக்கும் என புதுவிதமான காரணத்தை சொல்லி மறுத்திருக்கிறார்கள். ஆனால் சில நடிகைகள் வெளிப்படையாகவே ‘ நான் பெரிய ஹீரோக்களுடன் தான் நடிக்க ஆசைப்படுகிறேன்’ என்று கூறியிருக்கிறார்கள். அந்த நடிகைகளுக்கு பெரிய நன்றி. ஏனெனில் உண்மையை சொல்லியிருக்கிறார்கள்.
ஆனால் இந்தப் படத்தில் ஹீரோயின் அனுபமா என்று சொன்னதும் ஆச்சரியமாக இருந்தது. நான் காலேஜில் படிக்கும் போது பிரேமம் படம் பார்த்து அனுபமாவை ரசித்தவன். அவரே எனக்கு இப்போ ஹீரோயின் எனும் போது அனுபமாவுக்கும் எனது நன்றி என பிரதீப் ரெங்க நாதன் கூறினார்.
TVK Vijay:…
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…