Categories: Cinema News latest news

வைர மோதிரம் எல்லாம் போடுறாரே!.. விஜய்யின் தவெகவுக்கு எங்க இருந்து பணம் வருது தெரியுமா?..

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்னும் கட்சியை ஆரம்பித்த நிலையில் தொடர்ந்து மக்களை சந்தித்தும் மாணவர்களுக்கு விருது கொடுத்தும் வருகிறார். கடந்த ஆண்டு கல்வி விருது விழா என எஸ்எல்எல்சி மற்றும் +2 மாணவர்கள் முதல் 3 இடங்களை பொதுத் தேர்வில் பெற்ற நிலையில், தொகுதி வாரியாக தேர்வு செய்து வழங்கினார்.

அதே போல இந்த ஆண்டும் ஜூன் 28ம் தேதி மற்றும் ஜூலை 3ம் தேதி என 2 கட்டங்களாக நிகழ்ச்சியை நடத்தி முடித்தார். ஒரேயடியாக நடத்தினால் 15 மணி நேரத்துக்கு மேல் நிற்க வேண்டும் என்பதால், 2 கட்டங்களாக பிரித்து விருது விழங்கினார் விஜய்.

கடந்த முறை நந்தினி எனும் மாணவிக்கு மட்டும் வைர நெக்லஸ் பரிசாக வழங்கப்பட்ட நிலையில், இந்த முறை அதிக மதிப்பெண்களை பெற்ற சில மாணவர்களுக்கு வைர மோதிரங்களை பரிசாக விஜய் வழங்கினார்.

அதுமட்டுமின்றி மாணவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் ஒவ்வொரு ஊரில் இருந்தும் வருகை தரவும், அவர்கள் தங்கவும், அவர்களுக்கான உணவுகள் என அனைத்து செலவுகளையும் விஜய் செய்து வந்த நிலையில், இதற்கெல்லாம் எங்கே இருந்து பணம் வருகிறது என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

இந்நிலையில், சமீபத்தில் பேட்டியளித்த இயக்குனர் பிரவீன் காந்தி நடிகர் விஜய் தனது சொந்த காசுல தான் கட்சி செலவுகளையும் கல்வி விருதுகள் வழங்கும் நிகழ்ச்சிக்கான செலவுகளையும் செய்கிறார் என்றும் மற்ற யாரும் அவருக்கு நிதி வழங்கவில்லை என்றும் பேசியுள்ளார்.

Saranya M
Published by
Saranya M