Connect with us

Cinema News

இளைஞர்களை தப்பான வழிக்கு அழைத்துச் செல்வதே விஜய்யின் வேலை தான்!.. டென்ஷனான தயாரிப்பாளர்!..

தயாரிப்பாளர் மற்றும் நடிகரான தவமணி அவர்களின் மகன் கதநாயகனாக அறிமுகமாக உள்ள மகேஷ்வரன் மகிமை படத்தின் ட்ரெயிலர் வெளியிட்டு விழாவில் கலந்துக்கொண்ட தயாரிப்பாளர் கே. ராஜன் திரையுலகில் நடக்கும் பல ரகசியங்களை வெளிப்படையாக பேசியுள்ளார்.

கே. ராஜன் திரைத்துரையில் பல சிறிய பட்ஜெட் படங்கள் ரிலீஸாக தயாராக இருந்தும் விளம்பரத்திற்கு பணத்தட்டுப்பாடு ஏற்பட்டு 70க்கும் மேற்பட்ட படங்கள் வெளியிடாமல் கிடப்பில் உள்ளன. அதிலும் நடிகர் அதர்வா நடிப்பில் மொத்தம் 9 படங்கள் உள்ளது அதில் மூன்று படங்களுக்கு, மற்ற 16 படங்களுக்கு ராஜன் காசுக்கொடுத்து உதவியுள்ளார். அதர்வாவின் சம்பளம் ஒன்ரறை கோடியை கொடுத்துவிட்டு அப்படத்தின் தயாரிப்பாளர்கள் படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் கடன் வாங்கித் தவித்துக்கொண்டிருக்கின்றனர்.

என்னதான் தயாரிப்பாளர்கள் படத்தை தயாரித்தாலும் கூட இருக்கும் திரையுலகினரே புரிந்துக்கொள்ளாமல் படத்தை குறை சொல்கின்றனர். இந்நிலையில் கடனே இல்லாமல் தயாரிப்பாளர் தவமணி படத்தை எடுத்து மகனை ஹிரோவாக அறிமுகப்படுத்தியுள்ளார். மேலும், தற்போது போதை வழக்கில் சிக்கியிருக்கும் ஸ்ரீகாந்த் நல்ல மனிதன், குடுப்பத்திற்காக கோர்ட் கேசிற்காக அலைந்தார், பட வாய்ப்பு இல்லாமல் ஒரு படத்தை கடன் வாங்கி தயாரித்து தோல்வியடைந்து வாழ்க்கையில் பெரும் அவஷ்த்தை பட்டுள்ளார். அதன் விளைவாக அவர் மதுவிற்கு அடிமையாகிவிட்டார்.

ஆணவக்கொலை, பாலியல் பலாத்காரம் போன்ற பலவற்றை மையமாகக்கொண்டு எடுக்கப்பட்டுள்ள பல படங்கள் மத்தியில் சிறிய படங்களில் தான் குடும்பத்தின் தர்மத்தை எடுத்துரைத்துள்ளது. பெரிய படங்கள் முழுக்க வெட்டு, குத்து, கொலை, கொள்ள போன்ற படங்களில் விஜய், அஜித்,ரஜினி உள்ளிட்ட பல பெரிய நடிகர்கள் நடித்துள்ளனர், இவ்வளவு பெரிய ரசிகர் கூட்டம் இருக்கும் போது நடிகர்கள் படத்தில் செய்வதை தான் ரசிகனும் உண்மையாகவே செய்கின்றனர் என்றும் இன்றைய இளைஞர்கள் மற்றும் திரைத்துறையினர் கெட்டுப்போக விஜய் படங்கள் மிக முக்கிய அங்கம் வகிப்பதாகவும் பேசியுள்ளார்.

author avatar
Saranya M
Continue Reading

More in Cinema News

To Top