Connect with us

Cinema News

4 நாள்களில் 829 கோடியா? புஷ்பா 2 வசூல் விவரத்தை அறிவித்த பட நிறுவனம்.. ஆனால் எப்படி தெரியுமா?

சமீபத்தில் வெளியாகி சக்க போடு போட்டுக் கொண்டிருக்கும் திரைப்படம் புஷ்பா 2. சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான இந்தப் படத்தில் ஸ்ரீ வள்ளி கேரக்டரில் ராஷ்மிகா மந்தனா அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். கூடவே சாம் சிஎஸ் படத்திற்கான பின்னணி இசையை கவனித்துக் கொண்டார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான புஷ்பா படத்தின் முதல் பாகம் 400 கோடிக்கும் மேலாக வசூல் பெற்று பெரிய ப்ளாக் பஸ்டர் படமாக மாறியது. அதன் தொடர்ச்சியாகத்தான் புஷ்பா 2 படம் தயாரானது. யாருமே எதிர்பாராத வகையில் புஷ்பா 2 படம் வெளியான முதல் நாளிலேயே 200 கோடிக்கும் மேல் கலெக்‌ஷனை அள்ளியது. ஏற்கனவே வசூலில் முதல் இடத்தில் இருந்த கேஜிஎஃப் மற்றும் காந்தாரா போன்ற படங்களை எல்லாம் பின்னுக்கு தள்ளியது.

இந்த நிலையில் நேற்று மூன்றாவது நாள் வசூல் எவ்வளவு என தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவிஸ் நிறுவனம் அறிவித்தது. அதன் படி மூன்றாவது நாளில் 621 கோடி என அறிவித்தது. நான்காவது நாளான இன்று 700 கோடி வரை வரும் என எதிர்பார்த்தனர். ஆனால் இன்று நான்காவது நாள் மொத்த வசூல் என சுமார் 829 கோடி என அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

இதுவரை எந்த படங்களும் இவ்வளவு குறைவான நாள்களில் இத்தனை கோடி வசூலை கடக்க வில்லை என்பதுதான் உண்மை. இப்படியே போனால் புஷ்பா 2 படம் நிச்சயமாக 1500 கோடிக்கும் அதிகமாக வசூலை அள்ளும் என்று சொல்லப்படுகிறது.

இதற்கிடையில் இந்தளவு வசூல் அதிகரித்ததற்கான காரணமும் என்ன என்பது பற்றியும் செய்திகள் வெளி வருகின்றன. அதாவது தமிழை விட ஆந்திராவில் டிக்கெட் விலை 500 லிருந்து 600 வரை விற்கப்படுகிறார்களாம். நம்மூரில் ஃபேன்ஸ் டிக்கெட் என்ற பெயரில் தான் அதிக கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. மற்றபட் 190 ரூபாய் மட்டுமே டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் ஆந்திராவில் 600 வரை டிக்கெட் விற்கப்படுகின்றதாம். இப்படி இருந்தால் வசூலை அள்ளாதா என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in Cinema News

To Top