Categories: Cinema News latest news

600 கோடியை தாண்டிய புஷ்பா 2!.. மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?.. தயாரிப்பு நிறுவனம் கொடுத்த அப்டேட்

கடந்த 5 ஆம் தேதி அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான திரைப்படம் புஷ்பா 2. சுகுமார் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் மற்றும் சாம் சிஎஸ் ஆகியோர் இசையமைத்துள்ளனர். அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். இவர்களுடன் பகத் பாசில் ஒரு வில்லனாக நடித்து அசத்தியிருந்தார். கடந்த 2021 ஆம் ஆண்டு இந்தப் படத்தின் முதல் பாகம் வெளியானது.

முதல் பாகம் கிட்டத்தட்ட 400 கோடி கலெக்‌ஷனை அள்ளியது. படத்தில் மாஸ் காட்டுவதற்காக கற்பனை கூட செய்ய முடியாத வகையில் ஃபைட் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. ஒரு கட்டத்தில் அல்லு அர்ஜூனின் கை , கால்கள் கட்டப்பட வாயாலேயே அனைவரையும் கடித்து தூக்கி எறிவது இதென்னடா கூத்து என்றுதான் சொல்ல வைத்தது. ஹீரோவுக்குண்டான மாஸ் இருக்க வேண்டியதுதான்.

அதற்காக ஓவர் பில்டப் ஃபைட்டுகள் படத்தில் அதிகம் இடம்பெற்றுள்ளன. பாடல் காட்சிகளிலும் ஓவர் கிளாமர் காட்டப்பட்டிருக்கிறது. பின்னணி இசை பட்டையை கிளப்பியிருக்கிறது. அல்லு அர்ஜூன் பெண் வேடமிட்டு ஆடும் பாடல் காட்சி ரசிக்கும் படியாக அமைந்தது. இந்த நிலையில் படத்தின் மொத்த கலெக்‌ஷன் விவரத்தை தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவிஸ் நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.

படம் வெளியாகி மூன்று நாள்கள் ஆன நிலையில் இதுவரை கிட்டத்தட்ட 621 கோடி வசூலித்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருக்கிறது. இவ்வளவு குறைவான நாள்களில் இந்தளவு பெரிய வசூல் என்பது புஷ்பா 2 படத்திற்குத்தான் வந்திருப்பதாக சொல்லப்படுகிறது.

நான்காவது நாள் கண்டிப்பாக படம் 700 கோடியை தாண்டும் என்றும் மொத்தம் 1500 கோடி வசூல் உறுதி என்றும் தகவல் தெரிவிக்கின்றது. முதல் நாள் வசூலிலேயே கேஜிஎஃப், காந்தாரா போன்ற படங்களை தாண்டி மாஸ் காட்டியது புஷ்பா 2.

ராம் சுதன்
Published by
ராம் சுதன்