தனுஷ் நடித்த ராயன் படத்தின் டைட்டிலை கோயிந்தன் என மாற்றிவிட்டால் சிறப்பாக இருக்கும் என புளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தில் ராயன் படத்தை வறுத்தெடுத்துள்ளார். படத்தின் ஆரம்பத்தில் இளம் வயது தனுஷ் ஒரு சம்பவம் செய்து விட்டு தனது 2 தம்பிகள் மற்றும் ஒரு பச்சிளம் குழந்தை தங்கையுடன் சென்னைக்கு வருகிறார்.
செல்வராகவனிடம் அடைக்கலம் அடையும் தனுஷ் சாதாரண ஃபாஸ்ட் ஃபுட் கடை நடத்துபவராகவே காட்டுகின்றனர். அந்த இடத்தில் இரு கேங்கிற்கு இடையே மோதலை ஏற்படுத்த பிரகாஷ் ராஜ் திட்டமிட, ஒரு சந்தர்ப்பத்தில் தம்பியால் ஏற்படும் பிரச்சனை காரணமாக தனுஷ் கையில் கத்தியை எடுக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
இப்படி முதல் பாதியை சிறப்பாகவே ஸ்லோ அண்ட் ஸ்டெடியாக இயக்கிய தனுஷ் 2ம் பாதியில் கோட்டை விட்டுவிட்டார். படத்தை எப்படா முடிப்பாங்க என தவித்துக் கிடக்கும் அளவுக்கு நம்ம நிலைமையை மாற்றிவிட்டார். ஒரு குத்தூசியை வைத்துக் கொண்டு ஒரு லட்சம் பேரை தனுஷ் கொன்று குவிக்கிறார். அதனால், படத்துக்கு ராயன் என்பதற்கு பதிலாக குத்தூசி கோயிந்தன் என ரைமிங்கா பெயர் வைத்திருந்தால் நல்லா இருந்திருக்கும் என்று நக்கலாக கலாய்த்துள்ளார்.
முதல் பாதியில் இருந்த நிதானம் மட்டும் தெளிவு இரண்டாம் பாதியில் தனுஷை 2 பேர் குத்தும் இடத்தில் தனுஷ் படுப்பது போலவே படமும் படுத்து விடுகிறது. கிளைமேக்ஸ் காட்சியில் வரும் பாடலில் ரேப் செய்யப்பட்ட பெண் அப்படி ஜாலியாக டான்ஸ் ஆடுவது எல்லாம் அபத்தத்தின் உச்சம் என ராயன் படத்தை கழுவி ஊற்றியுள்ளார் புளூ சட்டை மாறன்.
நடிகர் தனுஷ் இயக்குனராக வேண்டும் என அடம்பிடித்து படத்தை உருவாக்கியுள்ளார். அவரது ரைட்டிங் ரொம்பவே புவராக இருந்ததால் படம் ரசிக்கும் படியில்லை என விமர்சித்துள்ளார்.
ரஜினி கமல்…
Rajasaab: ஏற்கனவே…
Kantara Chapter…
str 49…
நடிகர் தனுஷ்…