">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
ரஜினி பிரார்த்தனை கிடைத்ததும் ரசிகருக்கு நடந்த அதிசயம்!
ரசிகர் முரளிக்கு கொரோனா நெகட்டிவ் ரஜினியின் பிரார்த்தனை பலனளித்தது
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு உலகம் முழுக்க ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. அவருக்கு ஒன்னுன்னா எல்லோரும் ஒன்று கூடுமளவிற்கு ஜன பலத்தை வைத்திருப்பவர் ரஜினி. அதே போன்று அவரும் தன் ரசிகர்களுக்காக எதையும் செய்யக்கூடியவர்.
அதை நிரூபிக்கும் வகையில் ஒரு சம்பவம் தற்ப்போது நடந்துள்ளது. ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் ஒருவர் கொரோனா தொற்று தாக்கப்பட்டு மும்பையில் சிகிச்சை பெற்று வருகிறார். தனது உடல்நிலை மோசமடைந்ததை உணர்ந்த அவர் கடைசியாக ரஜினி பற்றி உருக்கமாக ட்விட் செய்திருந்தார். அதில், தலைவா என் இறுதி ஆசை. 2021 தேர்தலில் வெற்றி பெற்று தமிழக மக்களுக்கு மிகச் சிறந்த தலைவனாகவும் தந்தை மற்றும் ஆன்மீக குருவாகவும் வீர நடைபோட்டு அடித்தட்டு கிராம மக்களின் தனிநபர் வருமானம் 25K என்ற நிலை உருவாக்கி தாருங்கள்.
இன்னும் உன் வெற்றிகளை கண்டு உன்னை அரியணையில் ஏற்ற பாடுபடாமல் போகிறேனே என்ற ஒரே ஒரு வருத்தம் தான் என்னுள் உள்ளது. என கூறி உருக்கமாக பதிவிட்டிருந்தார். இந்த பதிவு இணையத்தில் வைரலாக நடிகர் ரஜினிகாந்த் இதுகுறித்து ஆடியோ ஒன்றை நேற்று வெளியிட்டுள்ளார். அதில், ” முரளி.. நான் ரஜினிகாந்த் பேசுறேன். உனக்கு ஒன்னும் ஆகாது கண்ணா… விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். தைரியத்துடன் இருக்க வேண்டும். குணம் அடைந்த பிறகு குடும்பத்தினருடன் என் வீட்டிற்கு வாங்க நான் பார்க்கிறேன் என ஆறுதல் கூறினார்.
இந்நிலையில் தற்ப்போது அந்த ரசிகருக்கு கொரோனா தொற்று நெகட்டிவ் என ரிசல்ட் வந்துள்ளதாக மகிழ்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. இது ரஜினியையும் சக ரசிகர்களையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து முரளி, அற்புதம் நிகழ்ந்தது. தலைவர் பிரார்த்தனையால் எனது கிட்னியும் சரி ஆகி மீண்டும் பழைய நிலைக்கு வருவேன். உங்கள் பிரார்த்தனைக்கு நன்றி என மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.