கடந்த 12ஆம் தேதி ரஜினி தன்னுடைய 74வது பிறந்த நாளை கொண்டாடினார். அப்போது அவர் ஜெய்ப்பூரில் கூலி திரைப்படத்தின் படப்பிடிப்பில் இருந்தார். அதனால் கூலி படக்குழு ரஜினியின் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினார்கள். தற்போது ரஜினி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி திரைப்படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
ரஜினியின் நடிப்பில் கடைசியாக வெளியான வேட்டையன் திரைப்படம் ரசிகர்களை திருப்திப்படுத்திய நிலையில் அடுத்ததாக கூலி படத்தின் மீதும் அனைவரின் கவனம் திரும்பியிருக்கிறது. லோகேஷ் கனகராஜின் ஸ்டைல் என்ன என்பது அனைவருக்குமே தெரியும். இதுவரை அவர் எடுத்த படங்கள் பெரும்பாலும் கேங்க்ஸ்டர் படங்களாகவே வெளிவந்திருக்கின்றன.
இதில் ரஜினியும் இணைகிறார் எனும் போது கூடுதல் எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த நிலையில் ரஜினியின் பிறந்த நாளின் போது இரண்டு பட அப்டேட்கள் வரவிருப்பதாக தகவல் வெளியானது. ஒன்று ஜெயிலர் 2 படத்தின் அப்டேட் இன்னொன்று கூலி படத்தின் அப்டேட். ஆனால் ஜெயிலர் 2 அப்டேட் எதுவும் வெளியாகாத நிலையில் கூலி படத்தின் ஒரு சின்ன கிளிம்ப்ஸ் வீடியோ மட்டும் வெளியானது.
சிகிடு என ஆரம்பிக்கும் அந்த பாடல் ஒரு சமயம் டி.ராஜேந்திரன் ஒரு பேட்டியின் போது சாதாரணமாக அவர் வாயால் போட்ட டியூன். அதை கூலி படத்தில் பயன்படுத்தியிருக்கிறார் அனிருத். இந்த கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானதில் இருந்து அனைவருமே அதியசித்துதான் போனார்கள். ஏனெனில் 74 வயதிலும் ரஜினி இப்படி எனர்ஜியாக ஆடுகிறாரே? ஒரு வேளை ஏஐ தொழில் நுட்பத்தை பயன்படுத்தி ரஜினியை ஆடவைத்திருப்பார்களோ என்றெல்லாம் ரசிகர்களுக்கு சந்தேகத்தை கிளப்பியது.
ஆனால் இந்தப் பாடலுக்கு ரஜினிதான் உண்மையிலேயே டான்ஸ் ஆடியிருக்கிறாராம். அதுமட்டுமில்லாமல் இந்தப் படத்தின் ஒரு ஸ்டண்ட் காட்சியிலும் டூப் போடாமலேயே தான் நடிக்கிறேன் என்று ரஜினி சொன்னதாகவும் ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது.
வடிவேலு ஒரு…
TVK Vijay:…
நான் கைக்கூலி…
TVK Vijay:…
TVK Vijay:…