">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
தர்பார் படம் பார்க்க வந்த ரஜினி ரசிகர்களை தடியடி நடத்தி கலைத்த போலீசார்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த தர்பார் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு பெரும்பாலான பாசிட்டிவ் விமர்சனங்களும் ஒரு சில நெகட்டிவ் விமர்சனங்களும் வெளிவந்து கொண்டிருக்கின்றது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த தர்பார் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு பெரும்பாலான பாசிட்டிவ் விமர்சனங்களும் ஒரு சில நெகட்டிவ் விமர்சனங்களும் வெளிவந்து கொண்டிருக்கின்றது. நடுநிலை ரசிகர்கள் இந்த படம் குறித்து கருத்து கூறிய போது முதல் பாதி சிறப்பாக இருப்பதாகவும் இரண்டாம் பாதி சுமாராக இருப்பதாகவும் கருத்து தெரிவித்து வந்துள்ளனர்
இந்த நிலையில் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மட்டும் தர்பார் திரைப்படம் விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக வெளியாகவில்லை என்றும் கூறப்படுகிறது. அவற்றில் ஒன்றான திண்டுக்கல் நகர் பகுதியில் தர்பார் திரைப்படம் வெளியாகவில்லை என்று தெரிகிறது
தர்பார் படத்தை முதல் காட்சியே பார்க்க வேண்டும் என்று எதிர்பார்த்து தியேட்டருக்கு வந்த ரஜினி ரசிகர்கள் படம் வெளியாகாததால் ஆத்திரமடைந்து தியேட்டரில் இருந்த பேனர்களை கிழித்து ரகளை செய்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக அந்த இடத்திற்கு சென்று ரஜினி ரசிகர்கள் மீது லேசான தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர் இதனால் அந்த பகுதியில் சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது