தக் லைஃப் ரிசல்ட்!. கமலும் ரஜினியும் ஒன்னு சேர வாய்ப்பே இல்ல!. அட போங்கப்பா!...

 
தக் லைஃப் ரிசல்ட்!. கமலும் ரஜினியும் ஒன்னு சேர வாய்ப்பே இல்ல!. அட போங்கப்பா!...

Rajini Kamal: நடிகர் ரஜினியும், கமலும் பல வருட நண்பர்கள். சரியாக சொல்வது எனில் அபூர்வ ராகங்கள் படத்தில் ரஜினி நடிக்க துவங்கியது முதல் இப்போது வரை, அதாவது 50 வருடங்களாக இருவரும் நல்ல நண்பர்களாக இருக்கிறார்கள். துவக்கத்தில் கமல் தான் நடித்த எல்லா படங்களிலும் ரஜினி நடிக்க சம்மதித்தார். ஏனெனில், இருவரின் கூட்டணி வெற்றியை கொடுப்பதாக தயாரிப்பாளர்கள் சொன்னார்கள்.

கமலின் ஸ்டைல் வேறு. ரஜினியின் ஸ்டைல் வேறு. கமல் சீரியஸ் சினிமாவை விரும்புபவர். நல்ல கதை, நடிப்பு ஆகியவையே கமலின் தேர்வு. ரஜினி அதற்கு நேர் எதிர். ரசிகர்கள் விரும்பும் கமர்ஷியல் மசாலா சினிமாவே அவரின் தேர்வு. எனவே, ஒரு கட்டத்தில் இருவரும் பிரிந்து நடிக்க துவங்கினர்.

தக் லைஃப் ரிசல்ட்!. கமலும் ரஜினியும் ஒன்னு சேர வாய்ப்பே இல்ல!. அட போங்கப்பா!...

கமல் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பல அவதாரங்களை எடுத்தார். ஆனால், ரஜினியோ நடிப்பதோடு மட்டும் நிறுத்திக்கொண்டார். 40 வருடங்களுக்கும் மேல் கமலும், ரஜினியும் இணைந்து நடிக்கவே இல்லை. அவர்களும் அதில் ஆர்வம் காட்டவில்லை. அதேபோல், கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமும் ரஜினியை வைத்து படம் தயாரிக்கவில்லை.

ரஜினியும், கமலும் இணைந்து மீண்டும் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்பதே பலரின் ஆசையாக இருக்கிறது. ஆனால், இருவருமே மழுப்பலான பதிலையே சொல்லி வருகிறார்கள். 2 வருடங்களுக்கு முன்பு கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவதாக இருந்தது. ஆனால், சில காரணங்களால் அது நடக்கவில்லை.

சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய கமல் ‘நாம ஒரு படம் பண்ணனும்னு பேசிக்கிட்டுருந்தோமே’ என ரஜினி என்னிடம் கேட்டார். ‘வெளியாட்கள் அதை செய்யக்கூடாது. ஒண்ணு நீங்க செய்யுங்க. இல்லையெனில் நான் செய்கிறேன். இல்லனா ரெண்டு பேரும் சேர்ந்து பண்ணுவோம்’ என சொன்னேன். இதற்கு முன் உதாரணமாக நானும் மணிரத்னமும் தக் லைப் படத்தை செய்து காட்டியிருக்கிறோம். ராஜ்கமலோட திறமையை முதலில் ரஜினியிடம் நிரூபிக்கணும்’ என சொல்லியிருந்தார்.


ஆனால், அப்படி வெளியான தக் லைப் படம் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. வருகிற விமர்சனங்களை பார்க்கும்போது தக் லைப் படம் கமலுக்கும் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்திற்கும் ஒரு தோல்விப்படமாக அமையும் என்றே கணிக்கப்படுகிறது. அதோடு இந்தியன் 2, தக் லைப் என தொடர் தோல்வியை கொடுத்திருப்பதால் கமலுடன் இணைந்து நடிக்கவும் வாய்ப்பில்லை, மேலும் ரஜினி ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்க வாய்ப்பில்லை என்றே கணிக்கப்படுகிறது.

From Around the web