Connect with us

latest news

விஜயகாந்துடன் நடிக்க மறுத்த மக்கள் நாயகன்… இதுதான் கதையா? பெட்மாஸ் லைட்டே தான் வேணுமா?

ராமராஜனை தமிழ்த்திரை உலகில் ‘மக்கள் நாயகன்’ என்று அழைப்பார்கள். அதற்குக் காரணம் அவர் மக்களோடு மக்களாக ஒன்றி நடிக்கக்கூடியவர். அந்தளவுக்கு அவர் எந்தவித பில்டப்பும் இல்லாமல் படத்தில் நடித்து அசத்துவார். ராமராஜன் கேப்டன் விஜயகாந்துடன் இணைந்து ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை. ஆனால் அவருக்கு அப்படி ஒரு வாய்ப்பு தேடி வந்தது. அது ஏன் மிஸ் ஆச்சுன்னு பார்க்கலாம்.

‘ராமராஜன் ரெடியா இரு. நாம சிங்கப்பூர் போறோம்’னு குருநாதர் அழகப்பன் சொன்னாரு. ஏன்னா உலகம் சுற்றும் வாலிபனில் தலைவர் தாய்லாந்து, ஜப்பான்னு எல்லாம் போவாரு. அப்படி இருக்கும்போது சிங்கப்பூர்னு சொன்னதும் ‘சூப்பர்’னு சொன்னேன். ‘என்ன சார் டைட்டில்’னு கேட்டேன். ‘பூமழை பொழியுது’ன்னு சொன்னாரு. ‘சூப்பர் சூப்பர்’னு சொன்னேன்.

‘யார் சார் ஜோடி’ன்னு கேட்டேன். ‘நதியா’ன்னு சொன்னாரு. ‘வெரிகுட் சார். ‘பூவே பூச்சூடவா நதியா’ன்னு சொன்னேன். ‘ஆமா’ என்றவர், ‘நீனு, நதியா, விஜயகாந்த்’னு சொன்னாரு. ‘என்னது விஜயகாந்தா…’ன்னு கேட்டேன். ‘அப்போ செகண்ட் ஹீரோவா’ன்னு கேட்டேன். ‘ஆமா’ன்னாரு.

‘என்ன சார் சொன்னீங்க சூட்டிங்ல. நம்ம ஊரு நல்ல ஊரு படத்துல வர்றது 80 சீன். 70 சீன்ல வருவ. நீ இல்லாத 10 சீனும் உன்னைப் பத்தித்தான் பேசுவீங்கன்னு இவ்ளோ பெரிய ஹீரோவாக்கி இப்ப செகண்ட் ஹீரோவா போட்டா எப்படி சார் நடிக்கறது’ன்னு கேட்டேன். அப்புறம் பேச்சே இல்லை.

‘ஓகே. ராமராஜன். கரெக்ட். நான் பார்த்துக்கறேன்’னுட்டாரு. எல்லாமே போன்ல தான் கேட்டேன். நான் வீட்டுல இருந்தே கையெடுத்துக் கும்பிடுறேன். எந்த வருத்தமும் இல்ல. என்னை மக்கள் எப்படி பார்த்துருக்காங்களோ அப்படித்தான் நடிக்க முடியும். செகண்ட் ஹீரோவா நடிக்க இன்ட்ரஸ்ட் இல்ல. எல்லாரும் மாதிரி நாம பண்றதுக்கு எனக்கு அதுல உடன்பாடு இல்லை. நமக்குன்னு ஒரு டிரேடு மார்க் இருக்கணும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நம்ம ஊரு நல்ல ஊரு படத்தை இயக்கியவர் அழகப்பன். இந்தப் படத்தின் மூலம் தான் ராமராஜன் முன்னணி நடிகர் ஆனார். அதன்பிறகு இவர் ராமராஜனை விஜயகாந்துடன் நடிக்க வைப்பதற்காக பூமழை பொழியுது படத்திற்காக கேட்க ராமராஜன் மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று வரை ராமராஜன் செகண்ட் ஹீரோவாகவோ, குணச்சித்திர வேடத்திலோ நடித்ததில்லை. ஒன்லி ஹீரோ தான்.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in latest news

To Top