">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
தமிழ் ராக்கர்ஸில் ஆர்.கே.நகர் ; சினிமா அழிந்து போகும் : வெங்கட் பிரபு கதறல்
ஆர்.கே.நகர் திரைப்படம் தமிழ்ராக்கர்ஸில் வெளியான விவகாரம் தமிழ் சினிமா உலகினருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
இயக்குனர் வெங்கட் பிரபுவின் பிளாக் டிக்கெட் நிறுவனம் தயாரிப்பில் உருவான திரைப்படம் ஆர்.கே.நகர். சரவணராஜன் இயக்கத்தைல் வைபவ், சனா அல்தாஃப், கருணாகரன் உள்ளிட்ட பலரும் நடித்த இப்படத்திற்கு பிரேம்ஜி இசையமைத்திருந்தார்.
இப்படம் சென்னை ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பே இப்படம் தயாராகி விட்டது. ஆனால், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் இப்படத்தை வெளியிட அரசியல் ரீதியாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதன்பின்னர் இப்படத்தின் வெளியீட்டு தேதி தள்ளிக்கொண்டே போனது. எனவே, சமீபத்தில் இப்படத்தை நெட்பிளிக்ஸில் வெளியிட்டனர்.
அதில், வெளியாகி சில மணி நேரங்களிலேயே இப்படம் தமிழ்ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியானது. இதனால் அதிர்ச்சியடைந்த நெட்பிளிக்ஸ்’ நிறுவனம் இப்படத்தை அத்தளத்திலிருந்தே தூக்கிவிட்டது.
இதைத்தொடர்ந்து, இப்படியே போனால் சினிமாவே அழிந்து போகும் என வெங்கட்பிரபு கதறியுள்ளார்.