தமிழ் படங்களில் வில்லனாக நடித்து பிரபலமான நடிகர்களில் ஒருவரான கோட்டா ஸ்ரீனிவாச ராவின் பிறந்த நாள் கடந்த ஜூன் 10ஆம் தேதி சென்ற நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ள அவரது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆந்திராவை சேர்ந்த கோட்டா ஸ்ரீனிவாச ராவ் ’பிராணம் கரீது’ என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதை தொடர்ந்து S/O சத்தியமூர்த்தி , அட்டாரின்டிகி தாரேடி, ரக்த சரித்திரம், லீடர் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். முக்கியமாக தெலுங்கு திரைப்படத்துறையில் பணியாற்றிய ஸ்ரீனிவாச ராவ் தமிழ், இந்தி, கன்னடம், மற்றும் மலையாளம் போன்ற பிற மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
கோட்டா ஸ்ரீனிவாச ராவ் தமிழில் ’சாமி’ திரைப்படத்தில் பெருமாள் பிச்சை என்ற கதாபாத்திரத்தில் நடித்ததை ரசிகர்கள் எப்போதுமே மறக்கமாட்டார்கள். அதன் பின்னர், ’திருப்பாச்சி’ திரைப்படத்தில் சனியன் சகடை என்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானார். மேலும், சகுனி, தாண்டவம், கோ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
பெரும்பாலும் நெகடிவ் ரோலில் மட்டுமல்லாமல் குணச்சித்திர வேடங்கள் மற்றும் நகைச்சுவை வேடங்களில் நடித்து புகழ்பெற்றவர். இதுவரை 700க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவரது சிறந்த நடிப்பிற்காக 9 மாநில நந்தி விருதுகள், சைமா மற்றும் பத்மஸ்ரீ என பல விருதுகளை வென்று குவித்தார். அதையடுத்து சில ஆண்டுகளாக ஆந்திரப் பிரதேசத்தின் விஜயவாடா கிழக்கு தொகுதியில் சட்டமன்ற எம்.எல்.ஏவாகவும் பணியாற்றினார்.
இந்நிலையில் தற்போது கோட்டா ஸ்ரீனிவாச ராவ் உடல்நலக்குறைவால் மெலிந்த உடலுடன் அடையாளமே தெரியாதது போல் மாறியுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அவரின் தற்போதைய நிலை பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ரஜினி கமல்…
Rajasaab: ஏற்கனவே…
Kantara Chapter…
str 49…
நடிகர் தனுஷ்…