மாயா பட இயக்குனரின் அடுத்த படம் - அசத்தலான வேடத்தில் சமந்தா...
நடிகை சமந்தா ஒரு புதிய வேடத்தில் நடிக்கவுள்ளார்.
மாயா திரைப்படம் மூலம் கவனம் ஈர்த்தவர் அஸ்வின் சரவணன். இப்படத்தில் நயன்தாரா நடித்திருந்தார். பேய்க் கதைதான் என்றாலும் அதை கையாண்ட விதத்தில் மாயா படம் ரசிகர்களை கவர்ந்து வெற்றிப்படமாகியது.
அப்படத்திற்கு பின் டாப்சி நடித்த ‘கேம் ஓவர்’ திரைப்படத்தை இயக்கினார். அப்படமும் வெற்றிப்படமாகியது.
இந்நிலையில், தற்போது மீண்டும் ஒரு பேய்க்கதையை அஸ்வின் நாராயணன் கையில் எடுத்துள்ளார். இப்படத்தில் சமந்தா கதாநாயகியாக நடிக்கவுள்ளார். இப்படத்தில் அவர் வாய் பேச முடியாதவராக அவர் நடிக்கவுள்ளார். அதற்காக சமந்தா பயிற்சியும் எடுத்து வருகிறாராம். இப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா ஊரடங்கால் தள்ளிப்போயுள்ளது. விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.