Categories: latest news

புத்தி இல்லையா? கணவரை குறித்து கேட்டதும் கடுப்பான சமந்தா!

நடிகை சமந்தா மற்றும் அவரின் கணவர் நாகசைதன்யாவுக்கு இடையில் விவாகரத்து விவகாரம் தலைவிரித்தாடுகிறது. இருவரும் சேர்ந்து இருப்பதில்லை. தி பேமிலி மேன் தொடரில் எல்லை மீறிய காட்சிகளில் நடித்து அக்கினேனி குடும்பத்தை அசிங்கப்படுத்திவிட்டதாக அவரை மாமனார் நாகர்ஜுனா கண்டித்ததாகவும் அதை எதிர்த்து நின்று சமந்தா வீட்டை விட்டு வெளியேறிவிட்டதாகவும் தினம் ஒரு செய்திகள் வெளிவந்த வண்ணம் இருக்கிறது.

இது குறித்து கணவன் மனைவி இருவருமே வாய் திறக்காமல் இருப்பது தான் இன்னும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அண்மையில் நடிகர் நாகசைதன்யா லவ் ஸ்டோரி ப்ரோமோஷன் விழாவில் பேட்டியாளர்களை சந்தித்த போது சமந்தா குறித்த எந்த கேள்விகளும் கேட்க கூடாது என ஒப்புதல் வாங்கிய பின்னரே பேட்டி கொடுத்தாராம்.

அதே போன்று சமந்தாவும் நேற்று திருப்பதி கோவிலுக்கு சென்றிருந்தார் அப்போது அவரிடம் பத்திரிக்கையாளர் ஒருவர் விவாகரத்து குறித்த செய்திகள் வெளியானதை பற்றி கேள்வி கேட்டிருந்தார். அதற்கு கடுப்பான சமந்தா புத்தி இல்லையா கோவிலுக்கு வந்திருக்கிறேன். எப்போ என்ன கேட்கணும்னு விவஸ்தை இல்லையா என கோபமாக திட்டிவிட்டு அங்கிருந்து நகர்ந்தாராம். இவரின் இந்த செயல் விவகாரத்து விஷயத்தை உறுதிப்படுத்துவது போன்று உள்ளது.

adminram
பி.எஸ்.ஸி. பட்டதாரியான இவர் 17 ஆண்டுகளாக ஊடகத்துறையில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, வணிகம் மற்றும்அரசியல் குறித்த செய்திகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 10 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி மர்றும் தொழில்நுட்பம் சார்ந்த பணிகளை கவனித்து வருகிறார்.
Published by
adminram