Connect with us

Cinema News

ஆர்யா காசுல ஜோரா புது வீடே கட்டிட்டாரே சந்தானம்!.. சிறப்பாக நடைபெற்ற புதுமனை புகுவிழா!..

நடிகர் சந்தானம் நடிப்பில் கடந்த மாதம் வெளியான டிடி ரிட்டன்ஸ் நெக்ஸ்ட் லெவல் படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், பெரிதாக வசூல் வேட்டை நடத்தவில்லை. இந்நிலையில் சந்தானம் தனது புது வீட்டிற்கு கிரகப்பிரவேசம் செய்துள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

விஜய் தொலைக்காட்சியின் லொள்ளு சபா நிகழ்ச்சியில் நகைச்சுவை நடிகராக தன் திரைப்பயணத்தை தொடங்கிய சந்தானம் சிம்பு நடித்த மன்மதன் படத்தில் நகைச்சுவை நடிகராக அறிமுகமானார். பின்னர் சச்சின், பொல்லாதவன், பில்லா, அழகிய தமிழ் மகன், சிங்கம் 2, ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற பல வெற்றி படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து நம்பர் ஒன் காமெடியனாக மாறினார்.

முன்னணி நகைச்சுவை நடிகராக வளர்ந்து வந்த சந்தானம் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தில்லுக்கு துட்டு, A1, டிடி ரிட்டர்ன்ஸ், வடக்குப்பட்டி ராமசாமி, ஏஜென்ட் கண்ணாயிரம் போன்ற படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் தயாரிப்பாளராகவும், கிக் என்ற படத்தில் பாடகராகவும் அவதாரமெடுத்தார்.

சமீபத்தில் வெளியான டிடி ரிட்டர்ன்ஸ் நெக்ஸ்ட் லெவல் படத்தின் ஆடியோ லாஞ்சில் சந்தானம் நான் புதுசா வாங்குன வீடு நல்லாவே இல்லைன்னு சொல்லி, ஆர்யா அந்த வீட்ட இடிச்சிடுன்னு சொல்லி இடிச்சிட்டான், எங்க அம்மாவும் மணைவியும் வெள்ளிக்கிழமையான விளக்கு ஏத்த அந்த வீட்டுக்கு போவாங்க , அப்படி அவங்க போயிட்டு வீட காணும்னு தேடிட்டு இருந்தாங்க என பேசியிருந்தார்.

இந்நிலையில் இடிச்ச இடத்தில் ஒரு புது வீட்டை கட்டி புதுமனை புகுவிழாவையே நடத்தியுள்ளார் சந்தானம். அவர் கோமாதா பூஜை செய்துள்ள வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். சந்தானத்தை வைத்து ஆர்யா டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தை தயாரித்தது மட்டுமின்றி சந்தானத்தின் கடன் சுமைகளையும் போக்கியிருந்தார்.

author avatar
Saranya M
Continue Reading

More in Cinema News

To Top