என்ன டான்ஸ்... வெறித்தனமா ஆட்டம் போட்ட சாயீஷா - வீடியோ!

சாயீஷாவின் நடன வீடியோ இணையத்தில் வைரல்

சாயீஷாவின் நடன வீடியோ இணையத்தில் வைரல்
ஆர்யா - சயீஷா ஜோடி கஜினிகாந்த் படத்தின் மூலம் காதலித்து கடந்த மார்ச் மாதம் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணம் ஹைதராபாத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு இவர்கள் இருவரும் ஜோடியாக நடிப்பார்களா என எதிர்பார்த்துவந்த நிலையில், திருமணத்துக்கு பின்னரும் ஆர்யா - சாயிஷா இணைந்து "டெடி" படத்தில் நடித்து வருகின்றனர்.
சக்தி சவுந்தர்ராஜன் இயக்கத்தில் உருவாகிவரும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற்று வந்தது. மேலும், ஆர்யா சல்பேட்டா என்ற படத்தில் நடித்து வருகிறார். வனமகன் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சாயிஷா. பழம்பெரும் நடிகர் திலீப் குமாரின் பேத்தியான இவர், கடைக்குட்டி சிங்கம், ஜூங்கா, கஜினிகாந்த், காப்பான் என முன்னணி கதாநாயகர்களுடன் நடித்தார்.
இதற்கிடையில் கொரோனா ஊரடங்கில் படப்பிடிப்புகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதால் சமூகலைத்தளத்தில் ஆக்டீவாக இருந்து வருகிறார். அந்த வகையில் தற்ப்போது செம ஸ்பீட் நடனமாடி practice செய்த டான்ஸ் வீடியோவை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு ரசிகர்களின் பாராட்டுக்களை பெற்று வருகிறார்
When you’re trying to get the choreography right after ages! #workinprogres pic.twitter.com/xPrY2sK3J0
— Sayyeshaa (@sayyeshaa) September 18, 2020