நானி நடிப்பில் வெளியான நான் ஈ படத்தின் கதையை திருடியதாக மலையாளத்தில் வெளியான லவ்லி படத்தின் மீது அந்த படத்தின் தயாரிப்பாளர் வழக்கு தொடர்ந்தார். அதை தொடர்ந்து தற்போது நானி நடித்து சமீபத்தில் வெளியான ஹிட் 3 படத்தின் கதையும் திருடிய கதை தான் என இயக்குனர் செல்வராகவனின் உதவி இயக்குனர் விமலவேலன் வழக்கு தொடர்ந்துள்ளார்.
நடிகர் நானி நடிப்பில் வெளியான ஹிட் 3 படம் கடந்த மாதம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று 100 கோடிக்கு மேல் வசூலை அள்ளியது. சமீபத்தில் ஒடிடியில் ரிலீஸாகியும் அனைவரின் கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில் உதவி இயக்குனர் விமலவேலன் ஹிட் 3 தான் லாக்டவுன் சமயத்தில் ஒன்றறை வருடமாக எழுதிய ஏஜெண்ட் 11 கதை, அதற்காக நிறைய வேலை செய்து எழுதிய கதையை திருடியதாக வழக்கு தொடர்ந்துள்ளார்.
சில ஆண்டுகளாக படங்கள் மற்றும் சீரியல்களில் உதவி இயக்குனராக பணியாற்றி வரும் விமலவேலன் தனக்கு பொதுவாக க்ரைம் த்ரில்லர் கதை மீது மிகுந்த ஆர்வம் உள்ளதாகவும், ஏற்கனவே யாத்ரா, நிருபன் என இரு கதை எழுதி நடிகர் சங்கத்தில் ரெஜிஸ்டர் செய்துள்ளதாகவும் இந்த ஏஜென்ட் 11 தனது மூன்றாவது கதையையும் பதிவு செய்துள்ளதாக கூறியுள்ளார்.
என் மனைவி நானியுடைய தீவிர ரசிகை நானும் அவரும் சேர்ந்து தான் ஏஜெண்ட் 11 கதையை எழுதினோம். பட வாய்ப்புகள் தேடி அலைந்துக்கொண்டிருக்கும் போது நானியின் மேனேஜரிடம் மெயில் ஐடி வாங்கி கதை அனுப்பினேன். அதற்கு அவரிடம் இருந்து எந்த் பதிலும் இல்லை. வழக்கம் போல் நானும் என் மனைவியும் நானி படம் என்பதால் ஹிட் 3 பார்க்க சென்ற போது பெரும் அதிர்ச்சியாக இருந்தது.
இதை தொடர்ந்து தென்னிந்திய நடிகர் சங்கத்தில் புகார் அளித்து, நீதிமன்றம் மூலம் நோட்டிஸும் அனுப்பியுள்ளோம் என தனது மனக்குமுறலை கூறியுள்ளார். சினிமாவில் தொடர்ந்து கதை திருட்டு விவகாரம் அதிகரித்து வருவது பெரிய கதையாக மாறியிருக்கிறது.
ரஜினி கமல்…
Rajasaab: ஏற்கனவே…
Kantara Chapter…
str 49…
நடிகர் தனுஷ்…