Categories: Cinema News latest news

இது ரொம்ப லேட்டு ஏட்டையா!.. கமல் அப்போவே சொன்னாரு!.. ஷங்கரு இப்போ அதை பண்ணாலும் வேஸ்ட்?..

இந்தியன் 2 படத்தின் புக்கிங் முதல் நாளை விட இரண்டாவது நாள் மிகப்பெரிய சரிவை சந்தித்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை ஆவது படத்தை தேற்ற வேண்டும் என்பதற்காக ஷங்கர் படத்தின் சில காட்சிகளை வெட்டி வீசப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

லைக்கா தயாரிப்பில் 250 கோடி பட்ஜெட்டில் வெளியான இந்தியன் 2 திரைப்படம் அந்த அளவுக்கு வசூலை அள்ளாது என்கிற ரிப்போர்ட் அனைத்து ஏரியாக்களிலும் இருந்து வந்த நிலையில், 3 மணி நேரம் தியேட்டரில் ரசிகர்களை கொடுமைப்படுத்த வேண்டாம் என நினைத்த ஷங்கர் ரொம்ப லேட்டாக இந்த முடிவு எடுத்துள்ளார்.

படத்தின் ஃபைனல் காப்பியை பார்த்துவிட்டு திருப்தி அடையாத கமல்ஹாசன் ஒரு 20 நிமிட காட்சிகளை கட் செய்து விடலாம் என ஆலோசனைக் கொடுத்தும் ஷங்கர் காதில் வாங்கவில்லையாம். அதன் பலனைத் தான் தற்போது அனுபவித்து வருகிறார் என்கின்றனர்.

இந்நிலையில், 20 நிமிட காட்சியை படத்திலிருந்து நீக்க ஷங்கர் முடிவு செய்துள்ளதாகவும் நாளை முதல் 2 மணி நேரம் 40 நிமிடம் படமாக இந்தியன் 2 திரையிடப்படும் என்று சினிமா வட்டாரத்தில் பேச்சுக்கள் உலாவி வருகின்றன.

சித்தார்த் சமுத்திரகனியை முதலில் வேவு பார்க்கும் காட்சி, கிளைமாக்ஸில் வரும் சிக்ஸ் பேக் சண்டை போன்றவற்றை நீக்கினாலே படம் கொஞ்சமாவது விறுவிறுப்பாக இருக்கும். முதல் பாதியில் வரும் இமான் அண்ணாச்சியின் காட்சிகளை எல்லாம் அப்படியே நீக்கிவிட்டால் கூட படம் தப்பித்து விடும் என்கின்றனர்.

ஆனால், இதெல்லாமே கண் கெட்ட பின்னர் செய்யும் சூர்ய நமஸ்காரம் போலத்தான் என்றும் படம் வெளியாவதற்கு முன்பாகவே படத்தை டைட்டாக்கி இருந்தால், இந்த அளவுக்கு நெகட்டிவ் விமர்சனங்கள் வந்திருக்காது.

Saranya M
Published by
Saranya M