Categories: Bigg Boss latest news

அம்மா கண்ட கனவெல்லாம் வீணாப்போசே!.. ரியாஸ் கான் மகனுக்கு என்ன குழந்தைன்னு பாருங்க!..

நடிகை உமா ரியாஷ் கான் சமீபத்தில் அளித்திருந்த பேட்டியில் தனக்கு பேத்தி தான் வேண்டும் பேண்ட் சட்டை வாங்கி அளுத்து போச்சு என பேசியிருந்தார். தற்போது அவர் மீண்டும் பேண்ட் சட்டை வாங்கும் நிலமை வந்துள்ளது. நடிகர் ஷாரிக் தனக்கு மகன் பிறந்திருப்பதை தனது இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்துள்ளார்.

நடிகர் ரியாஸ் கான் மற்றும் உமா ரியாஸ் கானின் மூத்த மகன் ஷாரிக் ஹாசன். ஜி.வி. பிரகாஷ் நடித்த “பென்சில்” என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் நடிகராக ஷாரிக் அறிமுகமானார். பிக் பாஸ் தமிழ் சீசன் 2 மற்றும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிகளில் போட்டியாளராக பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். ஆனால், எதிர்ப்பார்த்த அளவிற்கு பெரிதாக எந்த பட வாய்ப்பும் கிடைக்கவில்லை.

ஷாரிக் கடந்த ஆண்டு மரியா ஜெனிஃபரை திருமணம் செய்தார். ஜெனிஃபருக்கு முன்பே திருமணமாகி ஒரு பெண் குழந்தை இருந்தது, இது குறித்தி சில விமர்சனங்கள் எழுந்த நிலையில் ஷாரிக் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருவதாக அவரது மனைவி ஒரு பேட்டியில் பதிலளித்திருந்தார்.

ஷாரிக் தனது மனைவி கர்ப்பமாக இருப்பதாகவும், தான் தந்தையாகப் போவதாகவும் மகிழ்ச்சியான செய்தியை ரசிகர்களுடன் பகிர்ந்திருந்த நிலையில் மரியா ஜெனிஃபருக்கு வளைகாப்பு நடைபெற்று அதில் பல திரைபிரபலங்கள் கலந்து கொண்டு ஆசிர்வதித்தனர்.

இந்நிலையில், நேற்று தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக குழந்தையுடன் சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் ஷேர் செய்துள்ளார். தந்தையாக மாறிய ஷாரிக்கிற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Saranya M
Published by
Saranya M