Connect with us

Cinema News

சமந்தா முதல் கயாடு வரை!.. திருப்பதிக்கு திடீர் விசிட் அடிக்கும் ஹீரோயின்கள்.. இப்போ யாருன்னு பாருங்க!

சமந்தா, கயாடு லோஹர், ஜான்வி கபூர், பூஜா ஹெக்டே போன்ற பல பிரபலங்கள் திருப்பதி சென்று ஏழுமலையான் தரிசனத்தை பெற்று வரும் நிலையில் தற்போது ஸ்ரேயாவும் திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்து வந்துள்ளார்.

ஸ்ரேயா தெலுங்கு திரைப்படமான இஷ்டம் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதையடுத்து சந்தோஷம் என்ற தெலுங்கு படத்தின் மூலம் பிரபலாமான இவர் தமிழில் எனக்கு 20 உனக்கு 18 படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின்பு, மழை, திருவிளையாடல் ஆரம்பம், சிவாஜி, அழகிய தமிழ் மகன், அன்பானவன் அசராதவன் அடங்காதவன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

சிறு வயதிலேயே தன் தாயிடம் கதக் மற்றும் ராஜஸ்தானி நாட்டுப்புற நடனம் கற்று, பின்னர், புகழ்பெற்ற நடனக் கலைஞர் ஷிவனா நாராயணனிடம் கதக் பயிற்சி பெற்றார். ரஷ்ய டென்னிஸ் வீரரும் தொழிலதிபருமான ஆண்ட்ரி கோஷ்சீவ் என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு ராதா என்ற ஒரு பெண் குழந்தையும் உண்டு. சில ஆண்டுகளாக சினிமாவை விட்டு விலகியிருந்த ஸ்ரேயா தற்போது சூர்யா நடிப்பில் வெளியான ரெட்ரோ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி ரீ எண்டெரி கொடுத்துள்ளார். தேஜா சஜ்ஜா நடிப்பில் உருவாகியுள்ள மிராய் படத்திலும் இவர் நடித்துள்ளார்.

ஸ்ரேயா தனது இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் தளங்களில் அவருடைய புகைப்படங்கள், குழந்தையுடன் விளையாடும் வீடியோக்கள் என பலவற்றையும் ஷேர் செய்து வருகிறார். இந்நிலையில் இன்று திருப்பதி சென்று பெருமாளை தரிசனம் செய்துள்ள வீடியோ வைரலாகி வருகிறது. மேலும், நடிகை ஸ்ரேயா தமிழில் இன்னும் பல படங்கள் நடிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

author avatar
Saranya M
Continue Reading

More in Cinema News

To Top