Connect with us

Cinema News

ஸ்ருதி நாராயணனை வாழ விடுங்க.. ’கட்ஸ்’ படம் வியாபாரம் ஆகாததால் டென்ஷனான டைரக்டர்!..

சின்னத்திரை நடிகை ஸ்ருதி நாராயணன் இயக்குனர் ரங்கராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள கட்ஸ் படத்தில் இரண்டாம் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், அப்படத்தின் வெளியீடு பல சிக்கல்களை சந்தித்து வரும் நிலையில் படத்தின் இயக்குனர் ரங்கராஜ் ஸ்ருதி நாராயணனை வாழவிடுங்க என பேசியுள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

ஸ்ருதி நாராயணன் ஆரம்ப காலத்தில் சில யூடியூப் சேனல்களிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தயாரிப்பு உதவியாளராக பணியாற்றியுள்ளார். பின்னர், விஜய் டிவியில் ஒளிப்பரபாகும் ’சிறகடிக்க ஆசை’ சீரியலில் வித்யா கதாபாத்திரத்தில் நடித்து, பல ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று அனைவரின் கவனத்தை ஈர்த்தார். இந்த சீரியல் தமிழ்நாட்டில் டிஆர்பி ரேட்டிங்கில் முன்னிலையில் உள்ளது. மேலும், சமந்தா நடிப்பில் வெளியான ’சிட்டாடல் ஹனி பன்னி’ என்ற வெப் சீரிஸில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

சில மாதங்களுக்கு முன்பு ஸ்ருதி நாரயணனின் ஆபாச வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி சர்சையை ஏற்படுத்தியது. ஸ்ருதி இந்த வீடியோ AI மூலம் உருவாக்கப்பட்டது என்று விளக்கமளித்த நிலையில் பலர் அவருக்கு ஆதரவாகவும், சிலர் எதிராகவும் கருத்துகளை தெரிவித்தனர். பலரது கருத்துகளுக்கு பதிலளிக்கும் வகையில் நானும் ஒரு பெண், எனக்கும் உணர்ச்சிகள் உள்ளன” என்று ஆதங்கத்துடன் கூறி விடியோவை வெளியிட்டிருந்தார்.

அதை தொடர்ந்து கட்ஸ் பட ஆடியோ லான்சில் கலந்துக்கொண்ட அவர் ஒரு இயக்குனர் கேட்டதால் தான் அப்படியேல்லாம் செய்தேன் அவர் இப்படி வீடியோவை வெளியிடுவார் என தெரியாது. மேலும், எனக்கு வாய்ப்பளித்த இயக்குனர் ரங்கராஜுக்கு நன்றி என தைரியமாக பேசியிருந்தார். பின்னர், ஒரு படத்தின் ப்ரோமோஷனுக்காக வேலுநாச்சியார் போஸ்டரை வெளியிட்ட நிலையில் இப்படி தவறான முறையில் பிரபலமானவரை வைத்து வெளியிடுவது கேவலப்படுத்துவது போல் இல்லையா என பத்திரிகையாளர் கேள்வி எழுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும், கட்ஸ் திரைப்படத்தை வாங்க யாருமே முன்வராத நிலையில், பத்திரிக்கையாளர்களை சந்தித்த படத்தின் இயக்குனர் ரங்கராஜ், ஸ்ருதி திறமையான நடிகை அவர் ஏதோ தெரியாமல் செய்து விட்டார், அதற்காக அவரை காலி பண்ணனும்னு நினைக்கக் கூடாது. யாருதான் வாழ்க்கையில தப்பு செய்யாமல் இல்லை. அவங்களுடைய அவப்பெயர் மாறனும் , உலகத்தில் தப்பு செய்யாத மனிதனே இல்லை, அவங்களை வாழவிடுங்க வாழட்டும் என பேசியுள்ளார்.

author avatar
Saranya M
Continue Reading

More in Cinema News

To Top