ஒரு காலத்தில் இவரின் வருகை அப்போது இருந்த இளம் நடிகர்களை மிகவும் அச்சுறுத்தியது. துருதுருவென தன்னுடைய நடிப்பு, துள்ளும் இளமை, பெண்களை கவரும் தோற்றம் என கோலிவுட்டில் ஒரு கலக்கு கலக்கி விடுவார் என்று எதிர்பார்த்தனர். அதற்கேற்ப இவர் நடித்து அடுத்தடுத்த சில படங்கள் வெற்றியை பெற்றது. முதன் முதலில் 12பி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் ஷாம்.
முதல் படமே இளமை கொஞ்சும் படமாக அமைந்து அப்போதைய காலகட்ட இளைஞர்களை வெகுவாக கவர்ந்தது. படமும் வெற்றிப்பெற்றது. முதல் படத்திலேயே சிம்ரன் , ஜோதிகா என இவர்களுக்கு ஜோடியாக நடித்தார். இவருக்கு எங்கேயோ மச்சம் இருக்குதுப்பா என அப்போதைய முன்னணி நடிகர்கள் ஷாமை பற்றி கூறி வந்தார்கள். இந்தப் படத்திற்கு பிறகு உள்ளம் கேட்குதே, லேசா லேசா என அடுத்தடுத்த வெற்றிகளை கொடுத்தார்.
இயற்கை படம் இவரின் நடிப்பை அடுத்த கட்ட நிலைமைக்கு கொண்டு சென்றது. குறிப்பாக காதல் வந்தால் சொல்லி அனுப்பு பாடல் இன்று வரை இளைஞர்களின் மனதில் ஒலிக்கும் பாடலாக மாறி இருக்கிறது. இயற்கை படம் விமர்சன ரீதியாக வெற்றிபெறாவிட்டாலும் இப்போது பார்க்கும் போது ஏதோ ஒரு வகையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. 2000 ஆண்டுகளில் ஒரு முன்னணி நடிகராக வலம் வந்த ஷாமின் மார்கெட் திடீரென சரிய தொடங்கியது.
பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது. சமீபகாலமாக துணை நடிகராக நடித்து வருகிறார். விஜய் நடித்த வாரிசு படத்திலும் ஜெயம் ரவி நடித்த தில்லாலங்கடி படத்திலும் துணை நடிகராக நடித்தார் ஷாம். இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ஷாம் கோலிவுட்டை பற்றி கடுமையாக விமர்சித்திருக்கிறார். அந்த வீடியோதான் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
அதாவது கன்னட சினிமா உலகில் காந்தாரா, கேஜிஎஃப் என பேன் இந்தியா படங்களாக எடுத்து எங்கேயோ போய்க் கொண்டிருக்கிறார்கள். புஷ்பா படம் இந்திய ரிக்கார்டையே உடைத்து விட்டார்கள். பாகுபலி படம் சொல்லவே வேண்டாம். மலையாளத்திலும் நல்ல நல்ல கதைகளம் கொண்ட படங்களாக வந்து கொண்டிருக்கிறது. அங்கு கதைக்குத்தான் முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
ஆனால் இங்க பேச்சு ஜாஸ்தியா இருக்குது தவிற கண்டெண்ட் இல்லை. அதற்காக இயக்குனர்களை நான் தப்பா சொல்லவில்லை. பேச்சுதான் அதிகமாக இருக்கிறது. உலக சினிமாவே நம் கையில்தான் அப்படி மாதிரி பேசுறாங்க. என்ன பண்றாருனு பார்த்தால் ஒன்னுமே இல்ல. இதை உணர்ந்தால் நல்லது. நம் தமிழ் சினிமாவும் பேன் இந்தியா ஆகணும்.ஏனெனில் நம்ம கிட்டதான் சூப்பர் ஸ்டார் இருக்காரு. தளபதி இருக்காரு. தல இருக்காரு. ஆனால் பேன் இந்தியா ஏன் பண்ண முடியல? ஏன்னா பேச்சு மட்டும்தான் இருக்கு என ஷாம் கடுமையாக பேசியிருக்கிறார்.
TVK Vijay:…
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…