Connect with us

latest news

நேத்து ராத்திரி யம்மா பாட்டு வச்சதுக்கு காரணம் இதானாம்… தயாரிப்பாளர் சொன்ன அந்த தகவல்

ஆட்டம் எப்படி இருக்குங்கறது முக்கியமல்ல…. ஆடுறது யாருங்கறது தான் முக்கியம். ஆனா ரெண்டுமே தூள் கிளப்புதுன்னா அது இவர் கிட்ட தான். அப்படி தான் அந்தக் காலத்துல சில்க் ஸ்மிதாவை எல்லாரும் சொல்வாங்க.

சகலகலாவல்லவன் படத்தின் பெயருக்கு ஏற்ப பாடல்கள் எல்லாமே சூப்பர்ஹிட்டா இருந்தது. அதிலும் அந்த ‘நேத்து ராத்திரி யம்மா’ பாடலை யாராலும் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்து விட முடியாது.

சமீபத்தில் இதுகுறித்து யூடியூப் சானல் ஒன்றுக்கு தயாரிப்பாளர் ஏவிஎம் குமரன் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். பேட்டியின் போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்வி இதுதான்.

சகலகலா வல்லவன் படத்துல நடிக்கும்போது கமல்ஹாசன் அவ்ளோ பீட்ல இருந்தாரு. அம்பிகா, இளையராஜா, ஏவிஎம் என பல பெரிய ஜாம்பவான்கள் இருக்காங்க. அப்படின்னாலே படம் ஹிட் தான். இப்படி இவங்க எல்லாம் இருக்கும் போது சில்க் ஸ்மிதா தேவையா? அந்த இடத்துல நேத்து ராத்திரி யம்மா பாட்டு வைக்கணுமான்னு நிகழ்ச்சித் தொகுப்பாளர் கேள்வி கேட்டார்.

அந்தப் படம் எடுக்கும்போது கமர்ஷியல் பிக்சர் தான்னு மைன்ட்ல வந்தாச்சு. ஏவிஎம் கார்டன்லயே எடுத்தது தான் நேத்து ராத்திரி யம்மா பாட்டு. இந்தப் பங்களாவுலயும் எடுத்துருக்கோம். கமல், சில்க் இருவரும் இந்த இடத்திலும் ஆடினாங்க. இது கமர்ஷியல் பிக்சர். அதனால அந்தப் பாட்டு தேவை தான். கமர்ஷியலான விஷயம் தான் பண்றோம்னு துணிஞ்சி தான் அந்தப் பாட்டை வச்சோம்.

அதே மாதிரி கட்டை வண்டி, நிலா காயுது பாட்டையும் வச்சோம். இதை ஹைகிளாஸ் பீப்பிள் ரசிப்பாங்கன்னு சொல்ல முடியாது. பால்கனில இருந்து படம் பார்க்கிறவங்க என்ஜாய் பண்ண மாட்டாங்க. இதெல்லாம் ஒரு படமான்னு தான் சொல்லிட்டுப் போவாங்க.

ஆனாலும் இந்தப் படம் கமர்ஷியலா தான் எடுக்கறோம்னு முடிவு பண்ணித் தான் எடுத்தோம். எல்லா தரப்பினரும் அந்தப் பாட்டை ரசிச்சாங்க. முதல்ல ஒரு சாரார் இது என்னன்னு சொன்னாங்க. ஆனா அவங்க பிள்ளைங்க, ப்ரண்ட்ஸ் எல்லாரும் ரொம்ப நல்லாருக்கே இதுன்னு திருப்பியும் பார்ப்பாங்க. இல்லன்னா டெலிவிஷன்ல போட்டுப் பார்ப்பாங்க. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in latest news

To Top