Connect with us

latest news

ரஜினிக்கு கார்த்திக் சுப்பாராஜ் மாதிரி.. அஜித்துக்கு ஆதிக் மாதிரி! சிம்புவுக்கு இவர்தான்

ஏமாற்றத்தில் சிம்பு ரசிகர்கள்: தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்கள் ஒவ்வொன்றாக ரிலீஸாகிக் கொண்டிருக்க கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக சிம்புவின் நடிப்பில் ஒரு படம் கூட வெளியாகவில்லை. பத்து தல திரைப்படத்திற்கு பிறகு அவர் கமிட்டான திரைப்படம் ராஜ்கமல் நிறுவனத்துடன் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில்தான். ஆனால் அந்தப் படம் பெரிய பட்ஜெட்டில் உருவாக இருப்பதால் அந்தப் படத்தை எடுக்க யாரும் முன்வரவில்லை.

பெரிய பட்ஜெட்: ராஜ்கமல் நிறுவனமும் அதிலிருந்து விலகியது. அதற்கு பதிலாகத்தான் கமல் நடிக்கும் தக் லைஃப் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் கமிட் ஆனார். தக் லைஃப் படத்தை பொறுத்தவரைக்கும் இது சிம்புவுக்கு ஒரு முக்கியமான படமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இதற்கு அடுத்தபடியாக வரிசையாக படங்களில் கமிட் ஆகியிருக்கிறார் சிம்பு. சமீபத்தில்தான் அவருடைய பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.

தொடர் அப்டேட்: அப்போது வரிசையாக தொடர்ந்து மூன்று படங்களின் அப்டேட்டை கொடுத்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார் சிம்பு. அவருடைய 49வது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கப் போகிறார். 50வது படமான தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் படத்தை சிம்புவே தயாரிக்க போகிறார். 51வது படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்கப்போகிறார்.

அஸ்வத் மாரிமுத்து: அஸ்வத் மாரிமுத்து ஓ மை கடவுளே படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். இப்போது பிரதீப் ரெங்க நாதனை வைத்து டிராகன் படத்தை இயக்கியிருக்கிறார். இந்தப் படம் 21ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த நிலையில் சிம்பு அஸ்வத் மாரிமுத்து காம்போவில் தயாராகும் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தான் தயாரிக்க இருக்கிறது. இந்தப் படத்தின் ஒன் லைனை அர்ச்சனா கல்பாத்தியிடம் அஸ்வத் மாரிமுத்து முதலில் சொன்ன போதே அர்ச்சனாவுக்கு பிடித்துவிட்டதாம்.

இந்த ஒன் லைன் எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. இதில் சிம்பு நடித்தால் நன்றாக இருக்கும். இந்த லைனை யாருக்கும் விட்டுக் கொடுக்கமாட்டேன். அதனால் கண்டிப்பாக பண்ணலாம். சிம்புவிடம் போய் சொல்லுங்கள் என அர்ச்சனா அஸ்வத் மாரிமுத்துவிடம் சொல்லியிருக்கிறார். சிம்புவுக்கும் கதை கேட்டு மிகவும் பிடித்து போயிருக்கிறது. இந்தப் படத்தை பொறுத்தவரைக்கும் ஒரு ஃபேண்டஸியான பெரிய பட்ஜெட்டில் ஒரு கமெர்ஷியல் படமாகத்தான் இருக்கும் என அர்ச்சனா சொல்லியிருக்கிறார்.

அதுமட்டுமில்லாமல் சிம்புவின் தீவிர ரசிகராம் அஸ்வத் மாரிமுத்து. அஸ்வத் வழக்கமாக சிம்புவின் மேனேரிசத்தைத்தான் பின்பற்றுவாராம். அவர் பேசும் போதும் சரி பழகும் போதும் சரி சிம்புவின் சாயல் இருக்குமாம். அதனால் எப்படி ரஜினிக்கு ஒரு பேட்ட, கமலுக்கு விக்ரம், அஜித்துக்கு குட் பேட் அக்லியோ அந்த வரிசையில் சிம்புவின் 51வது படமும் இருக்கும் என சொல்லப்படுகிறது. ஃபேன் பாய் மூமெண்டாகத்தான் இந்தப் படம் வரப் போகிறது.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in latest news

To Top