Categories: latest news

தனக்குத் தானே குழியை தோண்டுறது இதுதான்.. சிவகார்த்திகேயனுக்கு இதெல்லாம் தேவையா?

சிவகார்த்திகேயனை கமல் எவ்வாறு நடத்தினார் என்பதை பற்றி சிவகார்த்திகேயன் பாராட்டி பேசியது எல்லாம் சரி. ஆனால் மொத்தமாக பல தயாரிப்பாளர்களை அவர் குறை சொன்னார். அது திரையுலகில் மிகப்பெரிய புயலை கிளப்பி இருக்கிறது. இது எந்த அளவுக்கு சிவகார்த்திகேயனுக்கு தெரியும் என எனக்கு தெரியவில்லை. ஏனெனில் ஒரு சில தயாரிப்பாளர்களை குறிப்பிட்டு இவர் அவர் என சொல்லி இருக்கலாம் .

அல்லது ஒரு சில இடத்தில் எனக்கு மோசமான அனுபவங்கள் ஏற்பட்டு இருக்கிறது என்று கூட சொல்லி இருக்கலாம். அப்படி சொல்லி இருந்தால் அது நியாயமானதாக இருந்திருக்கும் .மொத்தமாகவே இதுவரை எனக்கு யாருமே சம்பளம் கொடுக்கவில்லை. பல இடத்தில் என்னிடமிருந்து சம்பளத்தை பறித்துக் கொண்டார்கள் என இவர் பேசிய கமெண்ட் பெரும் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.

இவர் இப்படி பேசியதால் அவருக்கு நியாயமான முறையில் சம்பளம் கொடுத்த தயாரிப்பாளர்களுக்கும் ஒரு கெட்ட பெயரை வாங்கிக் கொடுத்திருக்கிறார் சிவகார்த்திகேயன். உதாரணத்திற்கு எடுத்துக் கொண்டால் சிவகார்த்திகேயனை வைத்து ஆரம்பத்தில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தை எடுத்த தயாரிப்பாளர் அவருக்கு நல்ல ஒரு சம்பளத்தை கொடுத்தார். அது மட்டுமல்ல அந்தப் படத்தின் வெற்றியை கொண்டாடுவதற்காக சிவகார்த்திகேயனுக்கு ஒரு காரையும் பரிசாக கொடுத்திருக்கிறார்.

இது போன்ற தயாரிப்பாளர்கள் இப்போது சினிமாவில் யார் இருக்கிறார்? இவர் இப்படி பேசியது இதுபோன்ற தயாரிப்பாளர்கள் மனதை காயப்படுத்தாதா? அதனால் ஒருவரை பாராட்டி பேசும் பொழுது சிவகார்த்திகையன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என சித்ரா லட்சுமணன் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். இதற்கு பதில் கொடுக்கும் விதமாக தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் கூறும் பொழுது சிவகார்த்திகேயன் இப்படி பேசி இருக்கிறார் என்றால் சமீபத்தில் நடந்த நிகழ்வுகள் தான் மனதில் இருந்திருக்கும்.

ஆரம்ப காலங்களில் அவருக்கு சம்பளம் என்பது மிகவும் குறைவு. அதனால் அந்த சம்பளத்தை அப்போது கொடுத்தார்கள் என்பதெல்லாம் சரி. உதாரணமாக அவருக்கு வந்த பிரச்சனைகளை குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் 75 கோடிக்கு லோன் எடுத்தது, கடன் சுமைகள் ,வேறு யாரோ கடனை அடைப்பதற்கு இவர் பட்ட கஷ்டம் என பல வலிகளை எதிர்கொண்டார் சிவகார்த்திகேயன்.

அதுமட்டுமல்ல ஒரு படத்திற்காக தன் மொத்த சம்பளத்தையும் திருப்பிக் கொடுத்தார் சிவகார்த்திகேயன் .கடந்த ஏழு வருஷமாக அவர் பார்த்த எல்லாமே பிரச்சனைகள்தான். அவருக்கு மொத்த சம்பளமாக கொடுத்தது என்றால் பிரின்ஸ் திரைப்படம் தான். அந்த படத்திற்கு மொத்த சம்பளமும் வாங்கினார் சிவகார்த்திகேயன். அது வேண்டுமென்றால் இவர் சொன்ன அந்த கமெண்ட் பிரின்ஸ் பட தயாரிப்பாளரை பாதிக்கும். அதை நான் ஏற்றுக்கொள்கிறேன்.

ஆனால் தமிழில் சில பேரிடமிருந்து இவருக்கு சம்பளம் கிடைக்கவில்லை. அப்போ அவர் மனதில் என்ன ஓடும் என்றால் எனக்கு எல்லாருமே இப்படித்தானே செய்வீர்கள் .நான் நிறைய சம்பளம் வாங்க ஆரம்பித்த பிறகு எல்லாருமே எனக்கு சம்பளத்தை முழுவதுமாக கொடுக்கவில்லை .அப்படிப்பட்ட சூழலில் ஆறு மாசத்திற்கு முன்பாகவே கமல் சார் எனக்கு மொத்த சம்பளத்தையும் கொடுத்து விட்டார் என பேசத்தான் தோன்றும்.

இதை கமலை பெருமைப்படுத்த வேண்டும் என சொல்லியிருக்க மாட்டார். இனிமே அக்ரிமெண்ட்டில் என்ன சம்பளம் போட்டிருக்கிறீர்களோ அதை அப்படியே கொடுத்தால் போதும் என மறைமுகமாக எல்லா தயாரிப்பாளர்களுக்கும் இதன் மூலம் சிவகார்த்திகேயன் சொல்லியிருக்கிறார் என தனஞ்செயன் கூறினார்.

ராம் சுதன்
Published by
ராம் சுதன்