இதுவரை மும்பை vs சென்னை… யார் கெத்து… யார் வெத்து!

ஐபிஎல் தொடரின் இரு பலமான அணிகள் என்றால் அது மும்பை அணியும் சென்னை அணியும்தான்.

ஐபிஎல் தொடரின் இரு பலமான அணிகள் என்றால் அது மும்பை அணியும் சென்னை அணியும்தான்.
கொரோனாவுக்குப் பிந்தையை மிகப்பெரிய கிரிக்கெட் சுற்றுலாவாக ஐபிஎல் இன்று மாலை 7 மணிக்கு தொடங்க உள்ளது. முதல் போட்டியாக கடந்த ஆண்டு இறுதிப் போட்டியில் கலந்துகொண்ட மும்பை மற்றும் சென்னை அணிகள் மோத உள்ளன. சமபலம் வாய்ந்த இரு அணிகள் மோதுவதால் போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.
இந்நிலையில் இந்த அணிகள் இதுவரை ஐபிஎல் வரலாற்றில் மோதிக்கொண்டு பெற்ற வெற்றி தோல்விகளின் புள்ளிவிவரங்களைப் பார்ப்போம். இதுவரை நடந்த 12 சீசன்களிலும் சென்னை மற்றும் மும்பை அணிகள் நேருக்கு நேர் 30 முறை மோதியுள்ளன. மும்பை 18 முறையும், சென்னை அணி 12 முறையும் வெற்றி பெற்றுள்ளனர். இறுதிப் போட்டியில் மூன்று முறை மோதியுள்ளன. அதில் ஒரு முறை சென்னை அணியும் , 2 முறையும் மும்பை அணியும் வென்றுள்ளன. கோப்பையை பொறுத்தவரை மும்பை 4 முறையும் சென்னை அணி 3 முறையும் வென்றுள்ளன.
இப்படி எல்லா வகையிலும் மும்பை அணி முன்னணியில் திகழ்கிறது. ஆனால் சூதாட்ட புகாரில் சிக்கிய சென்னை அணி 2 ஆண்டுகள் கலைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.