">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
ஆட்டோவுக்கு தடை.. தந்தையை தோளில் சுமந்து சென்ற மகன்.. அதிர்ச்சி வீடியோ
ஆட்டோவில் செல்ல போலீசார் அனுமதி மறுத்ததால் உடல் நலம் பாதிக்கப்பட்ட தனது தந்தையை அவரின் மகன் தோளில் தூக்கி சென்ற வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.�
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆட்டோ, பேருந்து, ரயில் என அனைத்து போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கேரளா மாநிலம் புனலூரில் வசிக்கும் 65 வயது முதியவருக்கு உடல் நலக்கோளாறு ஏற்பட்டது. எனவே, மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்தார். அவருடன் அவரின் மனைவி மற்றும் மகன் சென்றனர். சிகிச்சை முடிந்து வீட்டிற்கு ஆட்டோவில் வந்து கொண்டிருந்தனர். ஆனால், ஆட்டோவை மடக்கிய போலீசார், இதற்கு மேல் ஆட்டோவில் செல்ல முடியாது எனக் கூறிவிட்டனர்.
எனவே, அங்கிருந்து ஒரு கி.மீ தொலைவில் இருக்கும் தனது வீட்டிர்கு தந்தையை தனது தோளில் சுமந்தவாறு அவரின் மகன் சென்றார். அவரது தாயும் அவர்களுடன் நடந்தே சென்றார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானதும் போலிசாரின் நடவடிக்கைக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
நோயாளி என்கிற மனிதாபிமான அடிப்படையில் அவர்களை ஆட்டோவில் செல்ல போலீசார் அனுமதித்திருக்கலாம் என பலரும் கருத்து கூறி வருகின்றனர்.
#WATCH Kerala: A person carried his 65-year-old ailing father in Punalur & walked close to one-kilometre after the autorickshaw he brought to take his father back from the hospital was allegedly stopped by Police, due to #CoronavirusLockdown guidelines. (15.4) pic.twitter.com/I03claE1XO
— ANI (@ANI) April 16, 2020