Categories: Cinema News latest news

அடுத்த சூப்பர் ஸ்டார்னு கத்திய ரசிகர்கள்… பதறிய சூரி.. என்ன ரிப்ளே கொடுத்தார் தெரியுமா?

விடுதலை2:

விடுதலை 2 படம் இன்று வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. ஏற்கனவே கடந்த வருடம் இதன் முதல் பாகம் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில் இரண்டாம் பாகம் பூர்த்தி செய்தது என்றுதான் சொல்லவேண்டும். பெரும்பாலும் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் எதிர்பார்த்த அளவு அமையாது. ஆனால் விடுதலை படத்தை பொறுத்தவரைக்கும் இரண்டாம் பாகம் ருத்ரதாண்டவம் என்றே சொல்லலாம்.

ரசிகர்கள் இந்தப் படத்தை கொண்டாடி வருகின்றனர். ட்விட்டரில் பல விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான திரைப்படம் விடுதலை. இந்தப் படத்தில் சூரி கதையின் நாயகனாக நடிக்க பெருமாள் வாத்தியராக விஜய்சேதுபதி கேமியோ ரோலில் நடித்திருந்தார். ஆனால் இரண்டாம் பாகத்தில் விஜய்சேதுபதிதான் ஹீரோ என்றளவுக்கு வெற்றிமாறன் பயன்படுத்தியிருக்கிறார்.

சூரிக்கு கிடைத்த கிஃப்ட்:

இந்தப் படம் சூரிக்கு கிடைத்த பரிசு. அதுவரை நகைச்சுவை நடிகராகவே பல படங்களில் நடித்து வந்த சூரியை விடுதலை படத்தின் மூலம் கதாநாயகனாக்கியது வெற்றிமாறன் தான். விடுதலை படம் மட்டும் வரவில்லை என்றால் ஒரு நல்ல நடிகரை இழந்திருப்போம் என்று தான் சொல்லவேண்டும். வெறும் நகைச்சுவையை மட்டும் ரசித்துக் கொண்டு போயிருப்போம்.

இந்தப் படத்திற்கு பிறகு தற்போது சூரி பல படங்களில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமானார். விடுதலை படத்தின் முதல் பாகத்தில் சூரியின் நடிப்பை அனைவரும் பாராட்டினர். யாரும் எதிர்பாராத சில ட்விஸ்ட்களை சூரிக்காக பயன்படுத்தியிருந்தார் வெற்றிமாறன. துப்பாக்கி சுடுதல் காட்சியில் ரசிகர்களை பிரமிக்க வைத்திருந்தார். இந்தப் படத்திற்கு பிறகு ரசிகர்களும் சூரியிடம் இனிமேல் இந்த மாதிரி கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கவும் என கோரிக்கை வைத்தனர்.

பதறிய சூரி:

கருடன் திரைப்படமும் சூரிக்கு ஒரு நல்ல பேரை கொடுத்தது. ஆக்ரோஷமான நடிப்பை வழங்கினார். இப்போது முன்னணி நடிகர்களின் வரிசையில் சூரியும் இடம்பெற்று விட்டார் என்றுதான் சொல்லவேண்டும். இவருக்கு முன் வந்த சந்தானமும் நகைச்சுவையை விட்டுவிட்டு ஹீரோவாக களமிறங்கினார். ஆனால் சூரி அளவுக்கு சந்தானத்தால் ஹிட் கொடுக்க முடியவில்லை.

இந்த நிலையில் விடுதலை 2 படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்த சூரியை பார்த்ததும் ரசிகர்கள் அடுத்த தளபதி.. அடுத்த சூப்பர் ஸ்டார் என கத்த சூரி பதறிப் போனார் .உடனே அவர்களிடம் ‘எப்பா ஏய்.. அமைதியா இருங்கய்யா..உங்களில் ஒருவனாகத்தான் இருக்க விரும்புகிறேன். அதுவே போதும்’ என கூறிவிட்டு சென்றார்.

Also Read:தம்பி மாட்டிக்கிட்டாரு.. தப்பிக்கிறதுக்கு இப்படி ஒரு உருட்டு!.. விக்கியை கலாய்த்த பிஸ்மி..!

ராம் சுதன்
Published by
ராம் சுதன்