Categories: Cinema News latest news

அஜித்துக்கு கைமாறும் STR 48 படத்தின் கதை.. இது யாருமே எதிர்பார்க்கலயே

அஜித்தின் நடிப்பில் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த திரைப்படம் விடாமுயற்சி. புத்தாண்டு தினத்தை ஒட்டி விடாமுயற்சி படத்தின் டிரைலர் வெளியாகும் என அனைவரும் ஆர்வமுடன் காத்துக்கொண்டிருந்தார்கள். 12:00 மணிக்கு அனைவரும் புத்தாண்டை எதிர்நோக்கி காத்திருக்க இந்த வருடம் அஜித் ரசிகர்கள் விடாமுயற்சி படத்தின் டிரைலரை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தார்கள்.

ஆனால் அதற்கு முன்பாகவே லைக்கா நிறுவனம் ஒரு அதிர்ச்சியான அறிவிப்பை வெளியிட்டு ஒட்டுமொத்த அஜித் ரசிகர்களையும் கவலையில் ஆழ்த்தியது. பொங்கலுக்கு வர வேண்டிய விடாமுயற்சி திரைப்படம் அந்த தேதியில் இருந்து தள்ளிப் போவதாக அறிவித்திருந்தார்கள். சில தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த படம் பொங்கல் ரேஸில் இருந்து தள்ளிப் போகிறது என்று அறிவித்திருந்தார்கள்.

இந்த ஒரு தகவல் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இது ஒரு பக்கம் இருக்க யாருமே எதிர்பாராத ஒரு தகவல் இப்போது வெளியாகியிருக்கிறது. ரஜினிக்கு சொல்லப்பட்டு பின் அந்த கதை ரஜினியால் நடிக்க முடியாமல் அது அப்படியே சிம்புவுக்கு மாறியது. அதுதான் தேசிய பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிக்கும் அவருடைய 48வது திரைப்படம். வெந்து தணிந்தது காடு, 10 தல போன்ற படங்களுக்குப் பிறகு சிம்பு கமிட்டான படம் தான் இந்த தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் திரைப்படம்.

இது மிகப்பெரிய பட்ஜெட்டில் ஒரு வரலாற்று பின்னணியில் உருவாகும் திரைப்படமாக இருப்பதால் இந்த படத்தை எடுக்க தயாரிப்பு நிறுவனங்கள் முன்வரவில்லை. பெரிய அளவில் பட்ஜெட் தேவைப்படுவதால் மும்பை நிறுவனத்திடமும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் அந்த நிறுவனமும் இந்த படத்தை தயாரிக்க முன்வரவில்லை. ஒரு கட்டத்தில் சிம்புவே தயாரிப்பதாக ஒரு தகவல் வெளியானது .

ஆனால் அதைப்பற்றி வேறு எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை .இதற்கிடையில் தாணு சமீபத்திய ஒரு பேட்டியில் தேசிங்கு பெரியசாமி இயக்கப் போகும் அந்த படம் பாகுபலி படத்தை போல இரண்டு மடங்கு கண்டிப்பாக இருக்கும். அதில் பெரிய நடிகர் நடித்தால் இன்னும் நன்றாக இருக்கும் என கூறி இருந்தார். அதனால் தான் இப்போது இந்த படத்தின் கதை அடுத்ததாக அஜித்திற்க்கு சொல்லப்பட்டிருக்கிறதாம்.

அஜித் தரப்பிலிருந்து இதுவரை பாசிட்டிவான தகவலே வெளியாகி இருக்கிறது என தகவல் கிடைத்துள்ளது. இன்னொரு பக்கம் வரலாற்று பின்னணி கதை என்றால் அஜித்திற்கு செட்டாகுமா என்றும் கேள்வி எழுகிறது .கடைசியில் என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
சிவா