Connect with us

Cinema News

தமிழ் சினிமாவில் தொடரும் மரண சம்பவங்கள்.. சுப்ரமணியபுரம் நடிகரும் காலமானார்

நடிகர் ராஜேஷின் இழப்பு, மதயானைக் கூட்டம் இயக்குனர் விக்ரம் சுகுமாரன் மரணத்தை தொடர்ந்து தற்போது குணச்சித்திர நடிகர் முருகன் உயிரிழந்திருப்பது திரையுலகத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும், முருகனின் இழப்பிற்கு பலரும் இரங்கள் தெரிவித்து வருகின்றனர்.

முருகன் என்ற மொக்கை சாமி தமிழ் திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமான ஒரு துணை நடிகர் ஆவார். இவர் தமிழ் சினிமாவில், குறிப்பாக சுப்ரமணியபுரம் திரைப்படத்தில் அவரது நகைச்சுவை காட்சிகள் மற்றும் இயல்பான நடிப்பு பாராட்டப்பட்டது. மேலும் , இவர் என் ராசாவின் மனசில், ஓச்சாயி, மாயி உள்ளிட்ட பல படங்களில் சிறு வேடங்களில் நடித்துள்ளார்.

சசிகுமார் இயக்கத்தில் ஜெய், சுவாதி, சமுத்திரகனி, கஞ்சா கருப்பு போன்ற பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் வெளியான சுப்பிரமணியபுரம் படம் நட்பு, துரோகம், காதல் என கலவையாக எடுக்கப்பட்டதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் ஊர் தலைவராக நடித்த மொக்கசாமி மைக் செட்டுகாரர் மனைவியுடன் வைத்திருந்த கள்ளத்தொடர்பு வைத்திருக்கும் காட்சி ரசிகர்களால் கவனிக்கப்பட்டது.

சில ஆண்டுகளுக்கு முன்பு பேட்டி ஒன்றில் பேசிய முருகன், தான் இலைக்கடை வைத்துக்கொண்டிருந்ததாகவும், கடையில் லொகேஷன் பார்க்க வந்த சசிகுமாரிடம் பேசிய போது தான் அவரது அப்பா எனக்கு பழக்கம் என தெரியவந்தது. பின்பு சசிகுமார் அப்படத்தில் நடிக்க சொன்ன போது அதை மறுத்து விட்டேன். சசிகுமார் பேசி என்னை சம்மதிக்க வைத்தார். ஷூட்டிங் தொடங்கிய போது எனக்கு விபத்து ஏற்பட்ட நிலையில் நீங்க வரலனா சினிமாவே வேணாம்னு சொல்லிட்டரு. அப்புறம் எப்படியோ நடிச்சிட்டேன். என்னுடைய இந்த வளச்சிக்கு சசிகுமாரும் ஒரு காரணம். இன்னமும் அந்த படத்தில் இருக்கும் காட்சிகளை பலரும் மறக்காமல் கிண்டல் செய்கின்றனர் என பேசியுள்ளார்.

இந்நிலையில், இலைக்கடை முருகன் என்ற மொக்கச்சாமி இன்று தனது 78 வயதில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்திருப்பது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இவரது இழப்பிற்கு பலரும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

author avatar
Saranya M
Continue Reading

More in Cinema News

To Top