Categories: Cinema News latest news

வாயில் சிகரெட்!.. விஜய் இடத்துக்கு ஆசை!.. நம்பர் ஒன்னாக மாறிய சூர்யா!.. நடத்துங்க பாஸ்!..

நடிகர் சூர்யாவின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், அவரது பிறந்தநாளை முன்னிட்டு நள்ளிரவு 12:12 மணிக்கு 2டி நிறுவனம் சூர்யா 44 படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டது.

நடிகர் சூர்யா தனது 49வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். நடிகர் சிவகுமாரின் மகனும் நடிகர் கார்த்தியின் அண்ணனுமான சூர்யாவின் பிறந்தநாளை ரசிகர்கள் நற்பணி விழாவாகவே நடத்தி வருகின்றனர்.

கங்குவா படத்தில் இருந்து ஃபர்ஸ்ட் சிங்கிள் இன்று காலை 11 மணிக்கு வெளியாகவுள்ள நிலையில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே நடித்து வரும் சூர்யா 44 படம் அதிவேகமாக உருவாகி வருகிறது.

ஏற்கனவே அந்தமானில் சூர்யா 44 படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில், ஃபர்ஸ்ட் ஷாட் வீடியோவை வெளியிட்டு இருந்தனர். இந்நிலையில், நடிகர் சூர்யா கேங்ஸ்டர்கள் சுழ ஒரு இடத்தில் இருந்து வெளியே சிகரெட் பிடித்தபடி செம டெரர் லுக்கில் முகத்தில் கொஞ்சம் ரத்தம் சிதறிய முகத்துடன் பாதி ரோலக்ஸாக வரும் வீடியோ ஒன்று வெளியானது.

மேலும், ஹேப்பி பர்த்டே தி ஒன் என அதற்கு அனிமேஷன் எஃபெக்ட்டும் கொடுக்கப்பட்ட நிலையில், தி ஒன் தான் படத்தின் டைட்டிலா என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். விஜய்யை போலவே தம் அடித்து போஸ்டர், வீடியோ வெளியிட்டு சர்ச்சையை கிளப்பி வைரலாக நினைக்கிறாரோ என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன.

விஜய் இடத்தை அடுத்து சூர்யா பிடிப்பதற்காக முழு வீச்சுடன் செயல்பட்டு வருகிறார் என்பது தி ஒன் என்பதில் இருந்தே தெரிய வருகிறது என்கின்றனர். வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஒன் ஒன் ஒன் என தில் ராஜு பேசியிருந்தார். ரஜினிக்கு போட்டியாக வேட்டையன் படத்துடன் கங்குவாவை ரிலீஸ் செய்வதற்கும் அதுதான் காரணம் என்கின்றனர்.

இந்த வீடியோவை காண கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க..

https://x.com/2D_ENTPVTLTD/status/1815457289631133982

Saranya M
Published by
Saranya M