">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
இறந்த மனைவியை கொண்டு வந்த கணவர் – புதுமனை புகுவிழாவில் வியப்பூட்டும் சம்பவம்!
கர்நாடக மாநிலத்திலுள்ள பெல்லாரி என்ற பகுதியில் சீனிவாசகுப்தா என்ற தொழிலதிபர் தன மனைவியின் ஆசையை நிறைவேற்றும் விதத்தில் அவருக்கு பிடித்தவரு வீடு ஒன்றை கட்டி வந்துள்ளார். ஆனால், அதன் வேலைகள் முடிவதற்குள்ளே அவரது மனைவி விபத்து ஒன்றில் துரதிஷ்டவசமாக உயிரிழந்தார்.
இதையடுத்து மனைவிக்காக கட்டப்பட்ட வீட்டின் புதுமனை புகுவிழாவில் தனது மனைவியைப் போலவே அச்சு அசலாக மெழுகு பொம்மை ஒன்றை செய்து அவருக்கு பிடித்த பிங்க் நிற சேலையுடன் கூடிய அந்த
பொம்மையை வீட்டிற்கு வரவழைத்தார்.
அம்மாவின் மெழுகு பொம்மையை பார்த்த அவரது மகள்கள் இறந்து போன தங்கள் தாய் உயிரோடு வந்து விட்டதை போல மகிழ்ச்சி அடைந்தனர். பின்னர் மனைவியின் மெழுகு பொம்மையை சோபாவில் உட்கார வைத்து புது மனை புகுவிழா நிகழ்ச்சியை கணவர் நடத்தியதன் வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி அவரின் முயற்சிக்கு பாராட்டுக்கள் குவிந்து. வருகிறது.