கண்ணை மூடிக்கொண்டு திரிஷாவை வரைந்த ரசிகர் - வியப்பூட்டும் வீடியோ

நடிகை திரிஷாவை கண்ணைக்கட்டிக்கொண்டு தலைகீழாக வரைந்த ரசிகர்

லேசா லேசா படம் மூலம் அறிமுகம் ஆனவர் திரிஷா. ஆனால் அவருக்கு பெரிய வெற்றியை கொடுத்தது என்னவோ கில்லிதான். இந்த வெற்றிக்கு பின் திரிஷா காட்டில் அடை மழைதான்.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு திரையுலகிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தார். தமிழில் விஜய்,அஜித்,ரஜினி, கமல் என அனைத்து நடிகர்களுடனும் ரவுண்ட் கட்டி நடித்தார். தற்போது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் திரிஷாவின் தீவிர ரசிகர் ஒருவர் கண்ணை கட்டிக்கண்டு தலைகீழாக த்ரிஷாவின் உருவத்தை வரைந்து அசத்தியுள்ளார். 52 நொடிகள் கொண்ட இந்த வீடியோவை த்ரிஷா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு அந்த ஓவிய கலைஞனுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அச்சு அசல் த்ரிஷாவை போலவே உள்ள இந்த ஓவியம் அனைவரது மனதையும் கவர்ந்து பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.