">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
திருமண வரவேற்பில் ஜாலியாக நடனமாடிய மணமகன்… திடீரென நேர்ந்த விபரீதம்…
தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தில் உள்ள பிராமணகல்லி எனும் பகுதியில் வசித்து வந்தவர் கணேஷ், துபாயில் பணிபுரிந்து வந்த அவருக்கு கடந்த 15ம் தேதி சோப்னா என்கிற பெண்ணுடன் திருமணம் நடந்தது. இதற்காக கடந்த வாரம்தான் கணேஷ் துபாலியிருந்து ஆந்திரா வந்தார். திட்டமிட்ட படி ஒரு திருமண மண்டபத்தில் திருமண நிகழ்ச்சி மிகவும் உற்சாகமாக நடைபெற்றது.
அதன்பின் மாலை வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, சினிமா பாடல்கள் இசைக்கப்பட்டு நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் அனைவரும் ஜாலியாக நடனமாடியுள்ளனர். அப்போது அவர்களுடன் சேர்ந்து புதுமாப்பிள்ளை கணேசும், மணப்பெண் சோப்னாவுடன் சேர்ந்து நடனமாடினர். அப்போது திடீரென கணேஷ் மயங்கி கீழே விழுந்தார்.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த மணமகள் மற்றும் உறவினர்கள் அவரை அருகிலிருந்த ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அவர் மாரடைப்பில் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர் கூறிவிட்டார்.
காலையில் திருமணம் நடந்து மாலையில் புதுமாப்பிள்ளை இறந்ததால் மணப்பெண் உள்ளிட்ட அவரின் உறவினர்கள் கதறி அழுதனர்.