Categories: latest news

அகல கால் எடுத்து வச்சா? ஆக்‌ஷன் ஹீரோவா மாறணும்னு நினைச்சு காணாமல் போன நடிகர்கள்

கவுத்திப்புட்ட விடாமுயற்சி: இன்று விடாமுயற்சி படத்தை அனைவரும் கடுமையாக விமர்சிக்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் படத்தில் அஜித்துக்கு ஆக்‌ஷனே இல்லை என்பதால்தான். அந்த வகையில் அஜித்தை இத்தனை வருடகாலம் ரசிகர்கள் ஆக்‌ஷன் ஹீரோவாக பார்த்துவிட்டார்கள். அதனால்தான் விடாமுயற்சி படத்தின் கதை கண்டெண்ட் ஓரியண்டட்டாக இருந்தாலும் படத்தின் கதையை பார்க்காமல் ஆக்‌ஷன் இல்லை என்று விமர்சித்து வருகிறார்கள்.

ஆக்‌ஷனுக்கு இவ்ளோ முக்கியத்துவம்: இப்படி அஜித் மட்டும் இல்லை. ரஜினி, விஜய், தனுஷ், சிம்பு என இவர்கள் படங்களில் ஆக்‌ஷன் இருந்தால்தான் ரசிகர்கள் படங்களை வெற்றியடைய வைக்கின்றனர். அந்த வகையில் ஆரம்பத்தில் பல நல்ல நல்ல கதைகளை உள்ளடக்கிய படங்களில் நடித்து மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றவர்கள் ஜெய், ஜீவா, ஷியாம், பரத், ஸ்ரீகாந்த் போன்றவர்கள். ஒரு காலத்தில் இவர்கள் மீது மக்களுக்கு அதிக நம்பிக்கை இருந்தது.

தவறிய நடிகர்கள்: இவர்கள்தான் பிற்காலத்தில் ஒரு சூப்பர் ஹீரோக்களாக வருவார்கள் என்று எதிர்பார்த்திருந்தனர். ஹியாமை எடுத்துக் கொண்டால் 12பி , இயற்கை போன்ற காதல் படங்களில் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இளசுகளை வெகுவாக ஈர்த்தார். ஜெய்க்கும் ராஜாராணி படம் பெரிய அளவில் ஹிட்டை கொடுத்தது. அதில் ஆர்யா, நஷ்ரியா, நயன்தாரா என முன்னணி நடிகர்கள் நடித்திருந்தாலும் ஜெயின் கதாபாத்திரம்தான் அனைவருக்கும் பிடித்திருந்தது.

ராம் ஆகச்சிறந்த படம்: காதல் படத்தில் ஒரு துருதுரு கேரக்டரில் மிகவும் வாலிப வயதான மெக்கானிக்காக பரத் நடித்து அன்றைய இளைஞர்களுக்கு பிடித்தமான கேரக்டரில் நடித்திருந்தார். ஸ்ரீகாந்தும் ரோஜாக்கூட்டம் திரைப்படத்தில் அழகான லவ்வர் பாயாக வந்து இவர்தான்பா அடுத்த காதல் மன்னன் என்று சொல்லுமளவுக்கு காதலை கொட்டித்தீர்த்தார். ஜீவாவும் ராம் போன்ற ஒரு நல்ல கதையம்சம் கொண்ட படத்தில் ஆகச்சிறந்த நடிகராக நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

இவர்கள் எல்லாருமே இதே ஃபார்மட்டை பிடித்து படங்களில் நடித்து வந்திருந்தால் கூட இன்று சொல்லுபடியான மார்கெட் இருந்திருக்கும். ஆனால் இவர்கள் செய்த தவறு என்னவெனில் மற்றவர்களை போல் நாமும் ஆக்‌ஷன் ரூட்டை பிடிப்போம் என்று மாறியதால்தான் இன்று அவர்கள் இருக்கும் இடமே தெரியாமல் போய்விட்டார்கள். எல்லாருக்கும் ஆக்‌ஷன் என்பது செட்டாகாது என இவர்களை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

ராம் சுதன்
Published by
ராம் சுதன்