Connect with us

latest news

எல்லா கெட்ட வார்த்தைகளையும் ரெடியா வச்சுக்கோங்க.. ‘விடாமுயற்சி’ல இப்படி ஒரு காட்சியா?

அஜித் படம் என்றாலே ஒரு மாஸ் ஓபனிங், சூப்பர் ஹிட் ஓப்பனிங் சாங், தெறிக்கவிடும் ஸ்டண்ட் காட்சி என அனைத்துமே படத்தில் இருக்கும். ஆனால் விடாமுயற்சி படத்தில் அப்படி எதுவுமே இருக்காது. படத்தின் இயக்குனரான மகிழ் திருமேனி இந்த படத்தை பற்றி கூறும் பொழுது இந்த படத்தை பார்க்க பெரிய அளவில் எதிர்பார்ப்புடன் வராதீர்கள் என்று கூறியிருந்தார் .

ஏனெனில் வழக்கமான அஜித் படம் போல் இந்த படம் இருக்காது என்ற வகையில் அவர் பேசி இருந்தார். இந்த நிலையில் விடாமுயற்சி படத்தை பற்றிய ஒரு தகவல் தற்போது வைரல் ஆகி வருகின்றது. இரண்டு வருடங்களாக இந்த படப்பிடிப்பு நடந்து வந்ததாக சொல்லப்பட்டது. ஆனால் மகிழ்திருமேனி சரியாக 120 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடத்தி முடித்துள்ளோம். படத்தைப் பற்றி நிறைய விமர்சனங்கள் எழுந்தன. நெகட்டிவ் கமெண்ட்கள் வந்தன. ஏன் அவ்வாறு வந்தது என தெரியவில்லை.

அஜித் கூட ஏன் இவ்வளவு விமர்சனங்கள் வருகின்றன என கேட்டார் என்றெல்லாம் பல விஷயங்களை மகிழ்திருமேனி ஒரு பேட்டியில் கூறியிருந்தார். ஆனால் வலைப்பேச்சு பிஸ்மி இந்த படத்தை பற்றி கூறும் பொழுது விடாமுயற்சி படத்தை அவருடைய நண்பர் யாரோ ஒருவர் பார்த்தாராம். படத்தில் அஜித் ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியே இருக்கிறது என்று அந்த நண்பர் கூறியதாக பிஸ்மி கூறினார் .

அதாவது உலகத்தில் உள்ள எல்லா கெட்ட வார்த்தைகளையும் அஜித் ரசிகர்கள் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதை அப்படியே மகிழ்திருமேனிக்கு கொடுக்க சரியாக இருக்கும். ஏனெனில் இந்த படத்தில் அஜித்தின் இமேஜை சுக்கு நூறாக்கும் விதமாக ஒரு காட்சி இடம் பெற்றுள்ளதாக இந்த நண்பர் கூறியதாக பிஸ்மி கூறி இருக்கிறார். அப்படி என்ன மாதிரியான காட்சி என வெளிப்படையாக சொல்லவில்லை.

ஆனால் மகிழ்திருமேனி சமீபகாலமாக பல youtube சேனல்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார். அவர் பேசும்போது படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் தான் வருகிறதே தவிர பிஸ்மி சொன்னதைப் போல எந்த ஒரு நெகட்டிவ் எண்ணமும் வரவில்லை. ஆனால் பிஸ்மியின் நண்பர் அந்த படத்தை பார்த்து இப்படி கூறியது அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியாக இருக்கின்றது. ஏற்கனவே ஹாலிவுட் படமான பிரேக் டவுன் படத்தின் ரீமேக் தான் என அனைவருக்கும் தெரியும் .அப்படி இருக்கும் பட்சத்தில் அஜித்தை அப்படி எந்த மாதிரியான காட்சியில் காட்டி இருக்கிறார் என்பதை படத்தை பார்க்கும் பொழுது தான் நமக்குத் தெரியவரும்.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in latest news

To Top