சூடு பிடிக்கும் ஃபையர்: கடந்த 14 ஆம் தேதி காதலர் தினத்தன்று பாலாஜி முருகதாஸ் நடிப்பில் வெளியான திரைப்படம் ஃபையர். இந்தப் படத்தை இயக்கியவர் ஜே. சதீஷ். இவர்தான் படத்தை தயாரிக்கவும் செய்திருக்கிறார். படத்தில் பாலாஜி முருகதாஸுடன் இணைந்து சாக்ஷி அகர்வால் ,ரச்சிதா மகாலட்சுமி மற்றும் சாந்தினி தமிழரசன் என பிக்பாஸ் பிரபலங்கள் நடித்திருக்கின்றனர். இதில் பாலாஜி முருகதாஸ் ஒரு பிசியோ தெராபிஸ்ட்டாக நடித்திருப்பார்.
காசி கேரக்டர்: நாகர்கோவிலில் பல பெண்களை மயக்கி ஏமாற்றி பாலியல் ரீதியான சீண்டலிலும் ஈடுபட்ட காசியின் கதையை அடிப்படையாக வைத்துதான் இந்தப் படம் எடுக்கப்பட்டது. இதில் பாலாஜி முருகதாஸ் பெண்களை மயக்கி தன் வலைக்குள் சிக்க வைக்கும் கேரக்டரில் நடித்திருந்தார். முதலில் படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் ஒரு வித எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
முகம் சுழிக்க வைத்த டிரெய்லர்: அதன் பிறகு டிரெய்லர் வெளியாகி அனைவரையும் முகம் சுழிக்க வைத்தது. அந்தளவுக்கு படத்தில் கிளாமர் ஓவராக இருந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக சின்னத்திரையின் சரோஜாதேவியாக பார்க்கப்பட்டவர் ரச்சிதா மகாலட்சுமி. அவர் இந்தப் படத்தில் எதிர்பார்க்காத கிளாமரில் சில பலான காட்சிகளிலும் நடித்தது அனைவருக்கும் ஒரு வித முகம் சுழிப்பை உண்டாக்கியது.
ஸ்க்ரீன்களை கூட்டிய திரையரங்குகள்: ஆரம்பத்தில் இந்தப் படத்திற்கு போதுமான வரவேற்பு இல்லை. கிட்ட்டத்தட்ட 10 வருடமாக இந்த சினிமாவில் போராடி வரும் பாலாஜி முருகதாஸுக்கு இந்தப் படம் நல்ல ஒரு திருப்பு முனையாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஏன் ஒரு சமயம் திரையரங்கு வாயிலில் பாலாஜி முருகதாஸ் அழுவதையும் பார்க்க முடிந்தது. ஆனால் அவருடைய நம்பிக்கை வீண்போகவில்லை.
படம் வெளியான முதல் நாளில் ஃபையர் திரைப்படத்திற்கு 16 ஸ்க்ரீன்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்போது 60 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ரிலீஸான 4வது நாளில் படம் 70 லட்சம் வசூல் செய்திருப்பதாகவும் தெரிகிறது. இனி வரும் வாரங்களில் கூடுதல் வசூல் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. படம் முக்கியமாக பெண்கள் பார்க்கவேண்டிய படம் என்றும் அவர்களுக்காக ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே இந்தப் படம் என்றும் இயக்குனர் கூறியிருந்தார்.
TVK Vijay:…
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…