">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
இப்படிதான் தில்லா பேசணும்.. நீங்கள்தான் சிறந்த உதாரணம்… கங்கனாவை பாராட்டிய விஷல்
இப்படிதான் தில்லா பேசணும்.. நீங்கள்தான் சிறந்த உதாரணம்… கங்கனாவை பாராட்டிய விஷல்
நடிகர் சுஷாந்த் தற்கொலையை தொடர்ந்து பாலிவுட்டில் மாபியா கும்பல் செயல்படுவதாகவும், சினிமா நிகழ்ச்சிகள் சர்வ சாதாரணமாக போதை மருந்து புலங்குவதாகவும் நடிகை கங்கனா ரணாவத் பரபரப்பை புகாரை கூறியிருந்தார்.
மேலும், மும்பை பாதுகாப்பற்ற நகரமாக மாறிவருவதாக நடிகை கங்கனா ரணாவத் கூறியிருந்தார். எனவே, சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவாத்திற்கும் அவருக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது. கங்கனா மும்பை வந்தால் அவர் மீது தேசத்துரோக வழக்கு தொடரப்படும் என அவர் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து ‘நான் 9ம் தேதி மும்பை வருவேன். முடிந்தால் தடுத்துபாருங்கள்’ என கங்கனா கூறியிருந்தார். இதைத்தொடர்ந்து கங்கனாவுக்கு மத்திய அரசு ஒய் இசட் பாதுகாப்பு அளித்துள்ளது.
இதற்கிடையில், பாந்திரா, பாலிஹில்லில் உள்ள கங்கனா ரணாவத்தின் பங்களா வீட்டில் சட்டவிரோதமான கட்டுமான பணிகள் நடப்பதாகவும், உரிய அனுமதி இல்லாமல், கழிவறை பகுதியை அலுவலகமாக மாற்றியதாவும் கூறி, அவரின் வீட்டின் ஒரு பகுதி மாநகராட்சி ஊழியர்களால் இடிக்கப்பட்டது. இதற்கு பலரும் சமூக வலைத்தளங்களில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஆனாலும், தைரியமாக கங்கனா ரனாவத் தொடர்ந்து பேசி வருகிறார்.
இந்நிலையில், கங்கனா ரணாவத்தை நடிகர் விஷால் பாராட்டியுள்ளார். ஒரு விஷயத்தில் அரசே தவறே என்றாலும் தைரியமாக பேச வேண்டும் என்பதற்கு நீங்கள் நல்ல உதாரணம். உங்களின் தைரியத்தை கண்டு வியக்கிறேன் எனக்கூறியுள்ளார்.