">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
குழப்பத்தை ஏற்படுத்த இது நேரமல்ல – ஏ ஆர் ரஹ்மான் வேண்டுகோள்!
கொரோனா வேகமாக பரவி வரும் நேரத்தில் மத வழிபாட்டுத் தளங்களில் ஒன்றுகூடி குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் என ஏ ஆர் ரஹ்மான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொரோனா வேகமாக பரவி வரும் நேரத்தில் மத வழிபாட்டுத் தளங்களில் ஒன்றுகூடி குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் என ஏ ஆர் ரஹ்மான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொரோனா இந்தியாவில் இப்போது வேகமாக பரவ ஆரம்பித்துள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 110 பேருக்கு கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்களைத் தங்கள் வீடுகளிலேயே இருக்க சொல்லி பிரபலங்கள் அறிவுரை செய்து வருகின்றனர்.
அந்தவகையில் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் தனது டிவிட்டரில் ‘ தங்களுடைய உயிர்களைப் பணயம் வைத்து நமக்காக பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு அனைவருக்கும் நன்றி. நம்முடைய வேற்றுமைகளை மறந்து கண்ணுக்குத் தெரியாத இந்த எதிரியை போராட வேண்டும். அண்டை வீட்டாருக்கு, மூத்த குடிமக்களுக்கு, புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு, ஏழைகளுக்கு உதவி செய்வோம்.
கடவுள் உங்கள் உள்ளேயே இருக்கிறார். உங்கள் மனம்தான் பரிசுத்தமான கோயில். அதனால் மத வழிபாட்டுத்தலங்களுக்கு சென்று இப்போது குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம். அரசு சொல்லும் அறிவுரையைக் கேளுங்கள். சுய தனிமையில் சில வாரங்கள் இருந்தால் நமக்கு பல வருடங்கள் ஆயுள் கிடைக்கும். கொரோனா உங்களுக்கு உள்ளே இருப்பதை எச்சரிக்கை கூட செய்யாது. பொய்யான செய்திகளைப் பரப்பி மேலும் பதற்றத்தை உண்டாக்காதீர்கள்’ எனத் தெரிவித்துள்ளார்.