நேற்றிலிருந்து கோலிவுட்டில் ஒரே பரபரப்பாக பேசப்பட்ட செய்தி சூர்யா 45 படத்திலிருந்து ஏ ஆர் ரகுமான் விலகியது. கங்குவா படத்திற்கு பிறகு சூர்யாவின் நடிப்பில் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் திரைப்படம் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம். அந்த படத்தின் படப்பிடிப்பு முக்கால்வாசி முடிந்த நிலையில் ஆர்.ஜே பாலாஜி இயக்கும் ஒரு புதிய படத்திலும் சூர்யா ஒப்பந்தமாகி இருக்கிறார்.
அந்த படத்தின் படப்பிடிப்பிற்கான பூஜை பொள்ளாச்சியில் அமைந்துள்ள மாசாணி அம்மன் கோயிலில் நடைபெற்றது. அதன் பிறகு அங்கு சில காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றது .இதற்கிடையில் சூர்யா 45 படத்தில் ஏ ஆர் ரகுமான் இசையமைக்கப் போவதாக தகவல் வெளியானது. ஆனால் திடீரென நேற்று இந்த படத்தில் இருந்து ரகுமான் விலகி விட்டார் என கூறப்பட்டது .
அதற்கான காரணம் என்ன என ரசிகர்கள் பட குழுவினரிடம் கேட்டு வந்தனர். ஆனால் உண்மையான காரணம் என்ன என்பது பற்றி தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது .அதாவது சூர்யா 45 திரைப்படத்தை பொறுத்தவரைக்கும் அடுத்த வருடம் செப்டம்பர் மாதம் ரிலீஸ் என தீர்மானித்திருக்கிறார்கள். அதனால் ஏ ஆர் ரகுமானை பொறுத்த வரைக்கும் இன்னும் நான்கு மாதம் அல்லது ஐந்து மாதங்களில் ரிலீஸ் ஆகக்கூடிய படங்களில் முதலில் கவனம் செலுத்துவோம்.
அதிக நாட்கள் இருக்கும் படங்களை கொஞ்சம் தாமதமாக பணியாற்றலாம் என்று நினைத்தாராம். இது பற்றி பட குழுவினரிடம் ஏ ஆர் ரகுமான் பேசியதாகவும் சொல்லப்படுகிறது .ஆனால் ரஹ்மானின் இந்த முடிவுக்கு சூர்யா 45 பட குழு சமாதிக்கவில்லையாம். அதன் காரணமாகவே தான் படத்திலிருந்து ரஹ்மான் விலகியதாக இப்போது தகவல் கிடைத்துள்ளது.
ஏஆர் ரஹ்மான் விலக ஏதேனும் காரணம் இருக்குமா? அல்லது தயாரிப்பு நிறுவனத்துடன் ஏதும் பிரச்சினையா? யார் தான் காரணம் என ரசிகர்கள் குழம்பி வர கடைசி ரஹ்மானேதான் காரணம் என தெரிய வந்திருக்கிறது. அவருக்கு பதிலாக பிரபல பாடகர் திப்பு மற்றும் ஹரிணி இவர்களின் மகனும் இசையமைப்பாளரான சாய் அபியங்கர்தான் சூர்யா 25 படத்திற்கு இசையமைக்க போகிறார்
இவருடைய ஆல்பம் சாங் ஆச கூட பெரிய அளவில் ஹிட்டானது என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஏற்கனவே லோகேஷ் தயாரிப்பில் லாரன்ஸ் நடிக்கும் பென்ஸ் திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாக இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வடிவேலு ஒரு…
TVK Vijay:…
நான் கைக்கூலி…
TVK Vijay:…
TVK Vijay:…